உலகின் இரண்டாவது மிகப் பெரிய திறன்பேசியை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா 5 ஆண்டுகளில் மாறும் : ஆய்வில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

உலகின் இரண்டாவது மிகப் பெரிய திறன்பேசியை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா 5 ஆண்டுகளில் மாறும் : ஆய்வில் தகவல்

புதுடில்லி, பிப்.27 இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய திறன்மிகு அலைபேசி (ஸ்மார்ட் போன்) உற்பத்தி செய் யும் நாடாக 5 ஆண்டுகளில் மாறும். 2026-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 100 கோடி பேர் திறன் மிகு அலைபேசி பயனர்களாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள் ளது.

கிராமப்புறங்களில் ஏற்பட்டு வரும் இணையத்தின் தாக்கம் மற்றும் நவீன வளர்ச்சிகளால் வருகிற 2026-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் சுமார் 100 கோடி பேர் ஸ்மார்ட் போன் பயனர் களாக இருப்பார்கள் என்று டிலாய்ட் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் கணக்கின்படி, இந்தி யாவில் சுமார் 120 கோடி மக்கள் அலைபேசி பயன்படுத்துகின்றனர். இதில் சுமார் 75 கோடி பேர் திறன்மிகு அலைபேசி பயன் படுத்துபவர்கள்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய திறன்மிகு அலை பேசி உற்பத்தி செய்யும் நாடாக மாற இருக்கிறது. ஒன்றிய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் 2025-ஆம் ஆண்டிற்குள் அனைத்து  கிரா மப்புறங்களையும் பைபர் மய மாக்கும் முயற்சி கிராமப்புறங் களில் இணைய பயன்பாட்டினை அதிகரித்து இணைய அடிப்படையிலான சாதனங்களின் எழுச் சிக்கு ஊக்கமளிக்கும்.

2021-ஆம் ஆண்டில் 30 கோடி யாக இருக்கும் திறன்மிகு அலை பேசி தேவை வருகிற 2026-ஆம் ஆண்டில் 40 கோடியாக உயரும் என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

5ஜி வெளியீட்டிற்கு பிறகு ஸ்மார்ட் போன்களின் ஏற்றுமதி 2026-ஆம் ஆண்டில் 13.5 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் அந்த அறிக்கையின் படி, 2022-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டுக்குள்ளாக சுமார் 170 கோடி திறன்மிகு அலைபேசி வரை ஏற்றுமதி செய் யப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இது சுமார் 25 ஆயிரம் கோடி டாலர் சந்தையை உருவாக் கும் என்று கூறப்படுகிறது. மேலும் கிட்ட தட்ட 84 கோடி 5ஜி சாதனங்கள் இந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக விற்பனையாகும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment