மதுரை மாநகராட்சிக்கு இனி 5 மண்டலத் தலைவர்கள் - விரைவில் அதிகாரிகள், பணியாளர்கள் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

மதுரை மாநகராட்சிக்கு இனி 5 மண்டலத் தலைவர்கள் - விரைவில் அதிகாரிகள், பணியாளர்கள் நியமனம்

மதுரை, பிப்.28  மதுரை மாநகராட்சி புதிய கவுன்சிலர்கள், புதிய மேயர் பொறுப்பேற்ற பிறகு, மாநகராட்சியின் புதிய 5 மண்டலம் செயல்பட தொடங்குவதற்கான புதிய உதவி ஆணையர், மற்ற பணியாளர்கள் நியமனம் செய்வ தற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

 இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:   புதிதாக உதயமாகும் அய்ந்தாவது மண்ட லத்திற்கு மண்டலத் தலைவர் மட்டுமில்லாது, புதிய உதவி ஆணையரும் நியமிக்கப்படுகிறார். 5 மண்டலங்களுக்கான வார்டுகள் விவரம் வருமாறு:

1-ஆவது மண்டலம் கிழக்கு மண்டலமாகவும், 2-ஆவது மண்ட லம் வடக்கு மண்டலமாகவும், 3-ஆவது மண்டலம் மத்தியம் மண்ட லமாகவும், 4-ஆவது மண்டலம் தெற்கு மண்டலமாகவும், 5-வது மண்டலம் மேற்கு மண்டலமாகவும் செயல்பட இருக்கிறது. இதில், முதல் மண்டலத்தில் 3 முதல் 14 வார்டுகள் வரையும், 16, 17, 18, 19, 36 மற்றும் 40ஆவது வார்டுகள் இடம்பெறுகின்றன.

இரண்டாவது மண்டலத்தில் 1, 2, 15, 20 முதல் 28 வரையும், 31 முதல் 35 வரையும், 63 முதல் 66 வரையும் உள்ள வார்டுகள் இடம்பெறுகின்றன. மூன்றாவது மண்டலத்தில் 50, 51, 52, 54 முதல் 62 வரையும், 67 முதல் 70 வரையும் 75, 75, 77 ஆகிய வார்டுகளும் இடம்பெற்றுள்ளன. 4ஆவது மண்டலத்தில் 29, 30, 41 முதல் 49 வரையும், 53 மற்றும் 85 முதல் 90 வரையும் உள்ள வார்டுகள் இடம்பெற்றுள்ளன. 5ஆவது மண்டலத்தில் 71 முதல் 74 வரையும், 78 முதல் 84 வரை மற்றும் 91 முதல் 100 வரை வார்டுகள் இடம் பெற்றுள்ளன.

கவுன்சிலர்கள், புதிய மேயர் பொறுப்பேற்ற பிறகு புதிய மண் டலத்திற்கான உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், திட் டம் மற்றும் நிர்வாகப் பிரிவுக்கான அதிகாரிகள், பணியாளர்கள் நிய மனம் செய்து, இந்த புதிய 5 மண்டலங்கள் செயல்பட தொடங் கும். மேலும், வரி வசூலிப்பதற்கான தனி மென்பொருள் உள்ளிட்ட வையும் உருவாக்கப்படும். தற் போது அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதுஎன்று கூறினர்.

No comments:

Post a Comment