ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழப்பு; உக்ரைன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழப்பு; உக்ரைன் அறிவிப்பு

கீவ், பிப். 26- உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷ்ய படைகள் தாக்க தொடங்கின.  ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.   போர் நீடிக்கிறது என கூறப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை அமைச்சரான ஹன்னா மால்யார் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், எதிரி நாட்டின் இழப்புகள் மதிப்பிடப்பட்டு உள்ளன.  இதன்படி, 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன.  ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

உக்ரைனுக்கு உடனடி நிதி உதவி

உலக வங்கி அறிவிப்பு

வாசிங்டன், பிப். 26- உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்து உள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், உக்ரைனுக்கு உடனடியாக உதவிகள் வழங்க தயாராக இருக்கிறோம்.  அதிவேக நிதி பகிர்வு உள்பட உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை உரு வாக்கி வருகிறோம். இதுதவிர, உலக வங்கி குழுவானது உதவிகளை உடனடியாக வழங்குவதற்கு, எங்களுடைய அனைத்து நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உபகரணங் களை பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

உலக வங்கிக் குழுவின் தலைவர் டேவிட் மல்பாஸ், வன்முறை மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றால் உலக வங்கி குழுவானது அதிர்ச்சியடைந்து உள்ளது.  உக்ரைனின் நீண்டகால நண்பராக உள்ள நாங்கள், இந்த நெருக்கடியான தருணத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவுடன் இருப் போம் என்றும் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment