புதுடில்லி, பிப். 27- ‘செமிகண்டக்டர்’ தயாரிப் புக்காக, விரைவில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என, ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
உலகளவில், செமிகண்டக்டருக்கான தேவைகள்அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய அரசு, இந்தியாவில் இதற்கான ஆலைகளை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதற்காக, உற் பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, அரசின் இந்த மெகா திட்டத்தின் கீழ், செமிகண்டக்டர் தயாரிப்புக்காக பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
இந்நிலையில், அடுத்த சில மாதங் களுக்குள்ளாக, தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறிஉள்ளதாவது: இந்த திட்டத்துக்கு, நிறுவனங்கள் தரப் பிலிருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு, மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக் கிறது.
உலகளவில் செமிகண்டக்டர் தயா ரிப்பில் ஈடுபட்டிருக்கும் மிகப் பெரிய நிறுவனங்கள், அடுத்த சுற்றில் விண்ணப் பிக்கும் என எதிர்பார்க்கிறோம்.செமி கண்டக்டர் தயாரிப்புக்காக, ஏற்கெனவே எட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தயாராக இருக்கின்றன.இனி முடிவு செய்ய வேண்டியது நிறுவனங்களின் பொறுப்பு.
இந்த திட்டங்கள் மிகுந்த சிக்கலான திட்டங்களாகும். நிறுவனங்களை தேர்ந் தெடுப்பது மிகவும் வெளிப்படையான தாக இருக்கும். இதுவரை, செமிகண் டக்டர் மற்றும் ‘டிஸ்ப்ளே’ தயாரிப்புக ளுக்காக, அய்ந்து நிறுவனங்கள் விண்ணப் பித்திருக்கின்றன. இவை மேற்கொள்ள இருக்கும் மொத்த முதலீடு, 1.54 லட்சம் கோடி ரூபாய்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment