வாகனங்கள் விற்பனைக்கான செயலி அறிமுகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

வாகனங்கள் விற்பனைக்கான செயலி அறிமுகம்!

சென்னை, பிப். 4- இந்தியாவில் இணைய வழி கார் விற்பனையை மேலும் துரித மாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போக்ஸ்வேகன் பைனான்ஸ்-ன் ஒரு துணை நிறுவனமாகவும், இந்தியாவின் முதல் மற்றும் முன்னணி ஆட்டோ மோட்டிவ் ஃபின்-டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனமாகவும் திகழும் KUWY, இந் தியாவிற்கான அதன் சமீபத்திய தொழில் நுட்ப செயலி (KUWYLaas) என்பது தொடங்கப்படுவதை அறிவித்திருக்கிறது. 

இதுகுறித்து இந்நிறுவன தலைமை செயல் அலுவலர் பி.கணேஷ் குமார் கூறியதாவது: இதிலுள்ள தொழில்நுட்ப புத்தாக்கம், இன்றைக்கு இணையவழி கார் விற்பனையில் காணப்படுகின்ற சவால்கள் அனைத்தையும் அகற்றிவிடும் என்பதோடு, கார் வாங்குபவர்களுக்கு சிறப்பான அனுபவத்தையும் தரும்.  இணையவழி பரிவர்த்தனையை பூர்த்தி செய்ய ஏதுவாக்கும் மிக ஆழமான உள் நோக்குகளையும், கண்ணோட்டங் களையும் சேர்த்து வழங்கும். காரின் விவ ரக்குறிப்புகளில் தொடங்கி, நிதியுதவிக் கான விருப்பத்தேர்வுகளையும், கடன் வழங்கும் நிறுவனத்தையும் தேர்வு செய் வது மற்றும் முற்றிலும் காகித பயன்பாடு இல்லாத ஒரு செயல்பாட்டின் வழியாக நிதியுதவிக்கு உடனடி ஒப்புதலை பெறு வது வரை இதில் உள்ளடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment