வேலையின்மை, கடனால் தொடரும் தற்கொலை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 11, 2022

வேலையின்மை, கடனால் தொடரும் தற்கொலை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி,பிப்.11 கடந்த 2020-ஆம் ஆண்டு வேலையின்மையின் காரணமாக நாடு முழுவதும் 3,548 பேர் தற்கொலை செய்து கொண்ட தாக ஒன்றிய அரசு புள்ளிவிவரம் கொடுத்துள்ளது.

மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கி யுள்ள புள்ளிவிவரங்களின்படி கடந்த 2019-ஆம் ஆண்டு 2851 பேர் வேலையின்மையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவே 2018ஆம் ஆண்டு தற் கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2,841 இருந்தது.

அதேபோல கடனை திரும்பச் செலுத்த முடியாததன் காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு 4,970 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், 2019ஆம் ஆண்டு 5908 பேர் தற்கொலை செய்து கொண்டி ருந்தனர்.

இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 5213 ஆக பதிவாகி உள்ளது.

மன ரீதியிலான பாதிப்புகளை சமாளிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங் களிலும், மாவட்ட மனநல திட் டங்கள் உள்ளிட்ட பல்வேறு வழி முறைகள் கடைப்பிடிக்கப் பட்டதாகவும், தற்கொலை தடுப்பு சேவைகள் தனியார் அமைப்புகள் மற்றும் மாநில அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாகவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

No comments:

Post a Comment