மாநிலங்களவையில் தி.மு.க. வெளிநடப்பு
புதுடில்லி, பிப். 5- ‘நீட்’ விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக விவா திக்க அனுமதி மறுக்கப்பட்ட தாலும் மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்தும் மாநிலங்களவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்த நீட் விலக்கு மசோ தாவை 5 மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்த ஆளுநர், தற் போது அதனைத் திருப்பி அனுப் பியுள்ளார். இதுகுறித்து விவாதிக் கக்கோரி, மாநிலங்களவை தி.மு.க. குழுத்தலைவர் திருச்சி சிவா தாக்கீது வழங்கினார். இதனை ஏற்க அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், 'நீட்' மசோ தாவைத் திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி யைக் கண்டித்தும், மாநிலங்கள வையில் 'நீட்' விவகாரம் குறித்து விவாதிக்க மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கம் எழுப் பினர். அதைத் தொடர்ந்து, மாநி லங்களவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
‘நீட்’ தேர்வால் ஏழை, எளிய மாணவர்களுக்கு பாதிப்பு!
ஏழை, எளிய மாணவர்கள் நலன் கருதியே நீட் விலக்கு கோருகிறோம் என்று செய்தியா ளர்களிடம் தி.மு.க. உறுப்பி னர்கள் தெரிவித்தனர். தி.மு.கழக உறுப்பினர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திரிணாமுல் காங் கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க் சிஸ்ட், முஸ்லிம் லீக், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்தும்; விவா திக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.
தி.மு.க.வுடன் சேர்ந்து அக் கட் சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
திருச்சி சிவா பேட்டி
பின்னர், நாடாளுமன்ற வளா கத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா குறிப்பிட்டதாவது:-
"நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை". "நாளை பா.ஜ.க. ஆளும் மாநிலங் களிலும் இதுபோன்று நடக்கலாம். 'நீட்' தேர்வினால், ஏழை, எளிய மாண வர் கடுமையாகப் பாதிக்கப்படு கின்றனர். சிலவேளைகளில் மாணவ, மாணவியர் மனமுடைந்து தற் கொலை முடிவை எடுத்து விடு கின்றனர். இதனைத் தடுக்கவே நீட் விலக்கு கோருகிறோம். பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்றாலும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் மாணவர்கள், அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் அதிகம் அவதிப்படுகின்றனர். மருத்துவக் கல்வி என்பது அவர்களைப் பொறுத்த வரையில் எட்டாக் கனியாகவே உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 13 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மக்களின் வேதனை!
மக்களின் வேதனையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்ட முன் வடிவை நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். 5 மாதங்களாக அந்தச் சட்ட முன்வடிவை கிடப்பில் வைத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், தமிழ்நாடு சட்டப் பேரவைக்கே திருப்பி அனுப்பி யுள்ளார். ஏற்கெனவே இது தொடர்பாக, தமிழ்நாடு முதல மைச்சர் ஆளுநரைச் சந்தித்து, வலியுறுத்திய போதும், ஆளுநர் அந்த சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியுள்ளார். இது கூட்டாட் சித் தத்துவத்திற்கே முரணானது. அடித்தட்டு மக்களைப் புறக் கணிக்கும் இந்த நீட் விவகாரம் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் பற்றி யும் மாநிலங்களவையில் பேச விதி எண் 267இன் கீழ் நேற்று (3.2.2022) அளித்திருந்தேன். ஆனால் அதனை ஏற்க மறுத்த மாநிலங்களவைத் தலைவர் அது பற்றிப் பேசவும் அனுமதிக்க வில்லை. தாக்கீது கொடுத்த எனக்கும் அனுமதி தரவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுமதி தரவில்லை. நீண்ட நேரம் போராடியும் எங்களுக்குப் பேச வாய்ப்பு அளிக்காத கார ணத்தால் வெளிநடப்பு செய் தோம் எங்களை ஆதரித்த கட்சி களும் வெளிநடப்பு செய்தன.
இவ்வாறு அவர் பேட்டி யளித்தார்.
No comments:
Post a Comment