ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 9.2.2022

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

ஒரு நாடு, ஒரே பதிவு எனும் முறையை மாநில உரிமையையும் வருவாயையும் பாதிக்கும், தெலங்கானா முதலமைச்சர் கடும் எதிர்ப்பு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

நீட் தேர்வு விலக்கு மசோதா எந்தவித மாற்றமுமின்றி மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு விட்டது.

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தான்கரை அப்பதவி யில் இருந்து நீக்கக் கோரி பொது நல வழக்கு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

மோடி அரசு, (என்.டி.ஏ.) எந்த விவரமும் கொடுக்க முடியாத அரசு என ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

குஜராத்தில் 2002 நடைபெற்ற நிகழ்வுகளின் தொடர்ச் சிகள் தான் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது என்ப தாக கட்டுரையாளர் சங்கர்ஷன் தாகூர் விவரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் 1.2 கோடி பேர் வேலை கிடைத்துள்ளது என்பதை இ.பி.எப். பதிவை வைத்து கூறினார். ஆனால் சி.எம்.அய்.இ. தகவலின்படி வேலையின்மை 7.1 சதவீதம் என கூறப்பட்டுள்ளது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment