புதுடில்லி,பிப்.27- பணியாளர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு நிறுவனங்களின் பங்களிப்போடு செலுத்தப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) திட்டத்தில் மாதத் தவணை செலுத்தத் தவறினால் அதற்கு தொழில் நிறுவ னங்கள்தான் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிறுவனம் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.85,548 மற்றும் அத்துடன் செலுத்த வேண்டிய ரூ.74,288 தொகையை எதிர்த்து நிறு வனம் ஒன்று தொடர்ந்த வழக்கில் மனுவை தள்ளு படி செய்து நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித் தனர். ஒரு முறை தவணை செலுத்தத் தவறினால் அதை ஏற்க முடியும்.
இது தொடரும் பட்சத்தில் அதற்கு நிறுவனம் தான் பொறுப்பு. மாதத் தவணை செலுத்தத் தவறு வது மற்றும் தாமதமாக செலுத்துவது உள்ளிட்டவற்றுக்கு நிறுவனங் களே பொறுப்பு . எனவே அதற்குரிய இழப்பீட்டை இபிஎப் நிதியத் தில் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். 1952 ஆம் ஆண்டு இபிஎப் சட்ட பிரிவு 14பி பிரிவின்கீழ் தவணை செலுத்தத் தவறுவது குற்றவியல் குற்றமாகாது. ஆனால் இது மிகவும் அத்தியாவசியமான செயல்பாடு. எனவே நிறுவ னங்கள் தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து தவணைத் தொகையை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிப்பதில் தவறில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
சாமியார் ஆளும் உத்தரப்பிரதேசத்தில்
பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்த தாழ்த்தப்பட்ட
சமூக குடும்பத்தினர் மீது தாக்குதல்!
லக்னோ, பிப்.27- உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா நகரின் அருகே அமைந்துள்ளது அட்டா கிராமம். 130 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், உயர் ஜாதியினர் என்று கருதப்படும் ஜாட் பிரிவினர் அதிகபட்சமாக 70 குடும் பங்கள் உள்ளனர்.
இந்நிலையில், இங்குள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, சட்டப்பேரவைத் தேர்தலில், மாயாவதி தலைமை யிலான பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்திற்கு வாக்களித்த தாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜாட் பிரிவைச் சேர்ந்த ஜாதியவாதிகள், சில நாட்களுக்கு முன்பு, தாழ்த்தப்பட்ட சமூக குடும்பத்தின் வீட்டிற்குள் புகுந்து, ஆயுதங்களாலும், செங்கற்களாலும் கொடூரமான தாக்குதல் நடத்தி யுள்ளனர்.
இதில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட தங்களுக்கு நீதிகேட்டு மகோரா காவல் நிலையத்திற்கு சென்றபோது, காவல்துறை அவர்களின் கோரிக்கையைக் கேட்ப தற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்களையே திட்டி விரட்டியுள்ளனர்.
தாக்குதல் தொடர்பான காணொலி சமூகவலை தளங்களில் பரவிய நிலையில், பிரச்சினை தீவிரமா வதை தாமதமாக உணர்ந்த காவல் துறையினர், தற்போது 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேநேரம், யானை சின்னத்திற்கு வாக்களித்ததால், இந்த தாக்குதல் நடக்க வில்லை. மாறாக, கிரிக்கெட் போட்டி தொடர்பான தகராறி லேயே தாக்குதல் நடந்துள்ளது என்று பிரச்சினையை திசைத்திருப்பும் முயற்சி யிலும் இறங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment