சென்னை, பிப். 4- இந்திய மற்றும் உலக சந்தைகளுக்காக சொந்தமாக உள்நாட்டிலேயே சுயமாகத் தயாரிக் கப்படும் தயாரிப்புகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் நிறுவனமான "ஓபென் எலக்ட்ரிக்" அதன் தயாரிப்பு களை விரைவில் அறிமுகம் செய்ய விருப்பதன் மூலம் மின்சார-இரு சக்கர வாகனத்துறையில் அதன் நுழைவை அறிவித்திருக்கிறது.
ஓபென் எலக்ரிக், இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளைப் பெற்ற E2W (மின்சக்தியில் இயங்கும் இரு-சக்கர வாகனம்) ஸ்டார்ட்அப் நிறு வனமாகும். 4 வாகனங்கள் தயாரிப்பு செயல்முறையின் கீழ் தற்போது இருக்கும் நிலையில் அடுத்த 2 ஆண்டுகள் காலஅளவில் ஒவ் வொரு 6 மாதங்களுக்கும் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய இந் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இதுகுறித்து இந்நிறுவன இணை-நிறுவனர் தினகர் அக்ரவால் கூறிய தாவது: “வென்ச்சர் கேப்பிட்டல் நிதி செயல்முறை வழியாக, மொத்தத்தில் $2.5 என்ற தொகையை நாங்கள் திரட்டியிருக்கிறோம். ஒரு E2W ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் திரட்டப் பட்ட மிக அதிக வித்து மூலதனம் இதுவே. நுகர்வோர் பாதுகாப்பு, அவர்களது பெருமகிழ்ச்சி மற்றும் திருப்தி மீது சிறப்புக் கவனத்துடன் புத்தாக்கம் செய்வதற்கு இது எங்க ளுக்கு உதவுகிறது.
இந்திய நுகர்வோர்கள் ICE வாகனங்களிலிருந்து EV -க்கு (எலக்ட்ரிக் வாகனங்கள்) மாறுவதற்கு ஆர்வத்தையும், தூண்டுதலையும் தந்து ஏதுவாக்குவதே எமது நோக்க மாகும். அடுத்த சில ஆண்டுகள் கால அளவிற்குள் எமது தனிச் சிறப்பான தயாரிப்புகள் மூலம் உல களவில் செயல்படும் ஒரு பெரு நிறுவனமாக வளர்ச்சி காண்பது எமது நோக்கமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment