கீவ், பிப். 26- உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 2ஆவது நாளாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ்வில் பாலிஸ் டிக் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்ய தாக்குதல் அச்சத்தால் கீவ் நகரைவிட்டு அவசரமாக வெளியேற ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் முயன்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்தநிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக் குதலுக்கு கண்டனம் தெரிவித்து அலைபேசி விளக்குகளை ஒளிர செய்து லூதுவேனியா மக்கள் போராட்டம் நடத்தினர். அலை பேசி விளக்குகளை ஒளிர செய்து உக்ரைனுக்கான ஆதரவை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment