மே 14, 15ஆம் தேதிகளில் 'டான்செட்' தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 28, 2022

மே 14, 15ஆம் தேதிகளில் 'டான்செட்' தேர்வு

சென்னை, மார்ச் 28 -மே 14, 15ஆம் தேதிகளில் டான்செட்’ தேர்வுக்கு நாளை மறுதினம் முதல் விண்ணப்பிக்கலாம். 

தமிழ்நாட்டில் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் முதுநிலை பொறியியல் படிப்பு களான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் மற்றும் எம்.பி.ஏ. எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி, 2022-2023ஆம் கல்வி ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கான தேர்வு வருகிற மே மாதம் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

எம்.சி.ஏ. படிப்புக்கு 14ஆம் தேதி காலையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு 14ஆம் தேதி பிற்பகலிலும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு 15ஆம் தேதி காலையிலும் தேர்வு நடக்கும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சிதம்பரம், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, காரைக்குடி, சேலம், நாகர்கோவில், திருநெல்வேலி, தஞ்சாவூர், விருதுநகர், விழுப்புரம், வேலூர், திருச்சி ஆகிய 15 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் வருகிற 30ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18ஆம் தேதிக்குள்  இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு வருகிற மே மாதம் 2ஆம் தேதி நுழைவுச்சீட்டு வெளியிடப்படும்.

No comments:

Post a Comment