பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் 42ஆவது விளையாட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் 42ஆவது விளையாட்டு விழா

 திருச்சி, மார்ச் 5 திருச்சி, பெரியார் பள்ளியின் 42ஆவது விளையாட்டு தினவிழா - திருச்சி, பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியின் 42ஆவது ஆண்டு விளையாட்டு விழாவில் 04-.03-.2022 அன்று காலை 08.00 மணியளவில் பள்ளியின்  என்.எஸ்.கே. கலை வாணர் அரங்கில் பள்ளி தாளாளர்  வீ.அன்புராஜ் அவர்களின் வாழ்த் துக்களுடன், பள்ளி முதல்வர் கே.வனிதா  தலைமையேற்க, பன் னாட்டு மேனாள் ஒலிம்பிக் தடகள வீரரும், தென்னக ரயில்வே ஆய்வா ளருமான   எம். மணிகண்ட ஆறு முகம்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பெரியார் கல்வி நிறு வனங்களின் முதல்வர்களும், தலை மையாசிரியர்களும், முன்னிலையில் மொழி வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.

சிறப்பு விருந்தினர்  எம். மணி கண்ட ஆறுமுகம் அவர்கள் தேசிய கொடியேற்ற, விழாவிற்கு வருகை புரிந்தோர்களை பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ம.சாஸ்தா அரிணி வரவேற்று வரவேற்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து மழலை யர்களின் உடற்பயிற்சிகள், இறுதிப் போட்டிக்குத் தகுதியான மாண வர்களின் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், மழலையர்களின் கண்கவரும் நடை, யோகா பயிற்சிகள் காண்பவர் கண்களையும். கருத் தினையும் கவர்ந்தன. பல்திறன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவி களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களும் சிறப்பு விருந்தி னர்களால் வழங்கி சிறப்பிக்கப் பட்டது.

சிறப்பு விருந்தினர்  தம் உரையில் தான் பயின்ற போது படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டில் அதிகக்  கவனம் செலுத் தியதால் நான் இந்த அளவு சிறப்பான நிலைக்கு வரமுடிந்தது. விளை யாட்டு படிப் பிற்கு உறுதுணையாக இருக்கு மென்றும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி புத்து ணர்ச்சியை ஊட்டுகிறது. விளை யாட்டு வாழ்க்கையின் ஓர் அங்கம், ஆசிரியர்கள் மாணவர்களை விளை யாட அனுமதிக்க வேண்டும் இத னால் விளையாட்டு, மாணவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் உரையாற்றியதோடு, இந்த கரோனா காலகட்டத்திலும் உரிய பாதுகாப்பு முறைகளோடு மாண வர்களின் திறமையை வெளிக் கொண்டு வர இந்த விளையாட்டு விழாவை நடத்த ஏற்பாடு செய்த பள்ளியின் நிர்வாகம், முதல்வர் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் என வாழ்த்தினார்.

விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் போட்டிகள் வைத்து அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் அனைத்து போட்டிகளிலும் வென்று வாகை சூடி முதலிடம் பிடித்த நீல அணிக் கும், இரண்டாம் இடம் பிடித்த சிகப்பு அணிக்கும் மூன்றாம் இடம் பிடித்த மஞ்சள் அணிக்கும், நான் காம் இடம் பிடித்த பச்சை அணிக் கும் ஒட்டுமொத்த சுழல் கோப் பைகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

விழா நிகழ்வுகளை பள்ளியின் ஆசிரியைகள்  கே. தேவிலெட்சுமி,  எஸ். ஆன்டோ செலஸ்டினா ஆகியோர் தொகுத்து வழங்கி னார்கள்.

நிறைவாக  பள்ளியின் பன்னி ரெண்டாம் வகுப்பு மாண வன் பி. சஞ்சயின்  நன்றி நவில் நாட்டு பண் ணுடன் விழா இனிதே நிறை வுற்றது.

No comments:

Post a Comment