புதுடில்லி, மார்ச் 6 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.
தனியார் மருத்துவ கல் லூரிகளுக்கும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவ இடங்களுக்கும் கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்து ஆராய தேசிய மருத்துவ ஆணையம் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தது. இந்த குழு 26 வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பித்தது.
அந்த நெறிமுறைகள், கடந்த ஆண்டு மே மாதம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, மக் களின் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு கிடைத்த 1,800 கருத்து களை ஆராய மற்றொரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அக் குழு சமர்ப்பித்த இறுதி வழிகாட்டு நெறிமுறைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
அதன்படி, தனியார் மருத் துவக் கல்லூரிகளிலும், நிகர் நிலை பல்கலைக்கழகங்களி லும் 50 சதவீத மருத்துவ இடங்களில், அரசு மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டணத்தையே வசூ லிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், இதை அமல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தனியார் மருத்துவ கல் லூரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் 50 சதவீத மருத்துவ இடங்களுக்கு அந்த மாநிலத்தின் அரசு மருத் துவ கல்லூரியில் வசூலிக்கப்படும் மருத்துவ கட்டணத்தையே வசூ லிக்க வேண்டும்.
இந்த நடை முறை, அடுத்த கல்வி ஆண்டில் இருந்து அம லுக்கு வருகிறது.
இந்த சலுகையை அரசு ஒதுக்கீட்டில் இடம் வாங்கிய மாணவர்களுக்குத்தான் முதலில் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் கல் லூரியின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களுக்கு மட்டும் இந்த கட்டண சலுகையை வழங்க வேண்டும்.
ஒருவேளை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50 சதவீதத்தை விட குறைவாக இருந்தால், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் வாங்கிய வர்களில், யார் அதிக தகுதி பெற்றவர்களோ அவர்களுக்கு கட்டண சலுகையை அளிக்க வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறை களை ஒவ்வொரு மாநிலத்தின் கட்டண நிர்ணய குழுவும் கட்டாயமாக அமல் படுத்த வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளும், நிகர் நிலை பல் கலைக்கழகங்களும் நன் கொடை வசூலிக்கக்கூடாது. லாப நோக்கத்தில் கல்வியை அளிக்கக்கூடாது.
கல்வி நிறுவனத்தை நடத்தும் செலவுகள், பராமரிப்பு செலவுகள் அனைத்தும் கல்வி கட்டணத் தில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஆடம்பர செலவுகளை கல்வி கட்ட ணத்தில் சேர்க்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment