ஜோத்பூர், மார்ச் 4 சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக் கிய வழக்கில் சாமியார் ஆசா ராம்க்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய் யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஒன்றிய சிறையில் உள்ள சாமியார் ஆசாராம் தன்னை பிணையில் வெளிவர அனுமதிக்க வேண்டும் என்று மனு தொடர்ந்திருந்தார்.
இதற்கிடையே, மார்ச் 1 அன்று சிவராத்திரி நாளில் அவர் சிறையில் இருந்து கொண்டு ஆடிப்பாடி கொண்டாடினார். இதனை காட் சிப் பதிவாக்கி இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
ஆனால் அவர் தனக்கு தீவிர உடல்நலக்கோளாறு இருப்பதால் பிணை வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவை காரணம் காட்டி பிணை கோரும் நபர் எப்படி இவ்வாறு ஆடிப்பாடி இருக்க முடியும் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சிவ ராத்திரி அன்று சிறையில் பஜனை ஏற்பாடு செய்யப்படும். அந்த வகையில் இந்த முறையும் விடிய விடிய பஜனை நடைபெற்றது.
தற்போது சிறையில் இருப்பதால் சாமியார் ஆசாராமும் இந்த பஜ னையில் கலந்து கொண்டு ஆடிப் பாடினார். சிறைக் கைதிகளும் சேர்ந்து ஆடினர்.
அவர் உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை பிணை கோரி விண்ணப்பித்துள்ளார். இதுவரை உடல்நிலை சரியில்லை என்று காரணம் காட்டி 15 முறை பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment