உக்ரைன் மீதான போர் தற்காலிக நிறுத்தம் ரஷ்யா அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

உக்ரைன் மீதான போர் தற்காலிக நிறுத்தம் ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ,மார்ச் 5- உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வெளி யேற வாய்ப்பளிக்கும் வகையில், உக்ரைன் மீதான போரை தற்காலிக மாக நிறுத்திக்கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

    உக்ரைன் நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை மேற் கொண்ட ரசியா உக்ரைன்மீதான போரை  தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக  அறிவித்துள்ளது.  உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷ்யா, கடந்த மாதம் 24.2.2022 அன்று அந்நாட்டின் மீது இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு அய்க்கிய நாடுகள் அவை உள்பட பல்வேறு நாடுகள் தாக்குதலை நிறுத்துமாறுகோரி வந்த நிலையில், கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

    மக்கள் நலன் கருதி உக்ரைன் உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் போர் நிறுத்தப்படுவதாகவும் மேலும் உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வெளியேற வசதியாக தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. 


No comments:

Post a Comment