தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, மார்ச் 4 தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

    தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

    இதற்கான விண்ணப்பபடிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள்  www.tn.gov.in/department (Social Welfare and Women Empower Department)  மற்றும் www.tncpcr.tn.gov.in (Tamil Nadu Commission for Protection of Child Rights)என்ற இணையதளங்களிலிருந்து 

பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான படிவத்தில் புகைப்படத்துடன் 31.03.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம். 

    முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என்றும் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment