புதுடில்லி, மார்ச் 30- நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் அலைபேசியின் ஏற்றுமதி, 43 ஆயிரத்து 500 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, ‘இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன்’ தலைவர் பங்கஜ் மொகிந்ரூ கூறியதாவது: ஒன்றிய
அரசின், பி.எல்.அய்., எனும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தினால், நாட்டின் அலைபேசியின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த நிதியாண்டில் இது, 24 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. நடப்பு நிதியாண்டில், இதுவரை 42 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடை பெற்றுள்ளது. இம்மாத முடிவில், மேலும்1,500 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும். கரோனா தாக்கம், வேலையிழப்புகள், தடை உத்தரவுகள், ‘செமிகண்டக்டர் சிப்’ கிடைப் பதில் தட்டுப்பாடு ஆகிய பல சவால்களை தாண்டி, இந்த அளவுக்கு ஏற்றுமதி செய் யப்பட்டுள்ளது.
இதில், ‘ஆப்பிள்’ மற்றும் ‘சாம்சங்’ நிறு வனங்களின் பங்களிப்பு அதிகம்.இதற்கு முன் தெற்காசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றுக்கு ஏற்றுமதி ஆகி வந்த நிலையில், இப்போது வளர்ச்சியடைந்த சந்தைகளான ஆசியா, மற்றும் அய்ரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment