உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்

 சீமா ஹிஷ்தி

(மாநிலத்தைக் கடந்த இந்துத்துவ அரசியலுக்கு விடப்படும் சவாலுக்கான அடையாளங்கள் தென்படுகின்றன)

பா... தலைமையிலான கூட்டணியில் யாதவர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவர்களில் முக்கிய மானவராக கருதப்பட்டவர்கள் சுஹல்தேவ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பிரகாஷ் ராஜ்பர் ஆவர். புரட்சிக்கும் மாற்றத்துக்கும் .பி. தயாராக கனிந்துள்ளது என்று பேசியவர்களில் மிக மிக முக்கியமானவரான ராஜ்பர்ரின் முழக்கமேஅடிமைத் தனத்தை கைவிட்டுவிட்டு, சமூக ஒற்றுமையை உரு வாக்குங்குள்என்பதுதான். அவரது தொலைக்காட்சி நேர்காணல்களின் பின்னணி இதுதான். .பி. முதல மைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த மூன்று அமைச்சர்களும் அவர்களைத் தொடர்ந்து வரிசையாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுத் தலைவர்களும் பா... கூட்டணியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். தங்கள் விலகல் கடிதத்தில் அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட காரணமே - “பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள், விவசாயிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புறக்கணிக்கப்படு வதேஎன்று தெரிவித்து உள்ளார்கள். நடந்து கொண்டி ருக்கும் .பி. மாநில சட்டமன்றத் தேர்தலையும் கடந்து ஒரு பெரிய கதையின் அங்கங்கள் வடிவெடுத்துக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. காசியின் பக்கம் தோன்றிய இந்த பெருவெடிப்பு தோற்றம், தீப்பிடிக்கச் செய்ய இயன்ற முஸ்லிம்களுக்கு எதிரான வெறிக்கூச்சல் ஆகியவையே இதர பேச்சுக்களை எல்லாம் இருட் டடிப்பு செய்ய இயன்றவையாக இருந்தன.

ஒரு வானவில் இந்திய தேசியம் என்ற கண்ணோட் டத்தை மாற்றி, இந்துத்துவா கண் ணோட்டத்தை அளிப் பது என்ற தெளிவான பேச்சுக்களும் அங்கிருந் தன. இந்துத்துவக் குடையின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு ஓர் இடத்தை அளிப்பதைக் குறிப்ப தாகும் அது.

மண்டல ஆணைய பரிந்து ரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டு இப்போது ஒரு தலைமுறை சென்று விட்டது. அதன் பயன்களை அனுப வித்து நகர்ந்த இதர பிற்படுத் தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்கள். ஏற்கெனவே அடைந்த பயன்களை விடக் கூடுதலான பயன்களைப் பெறு வதற்கு விரும்புகின்றனர் என்பது தர்க்க ரீதியில் நியாயமானது தான். 2010ஆம் ஆண்டு பொருளாதாரப் பின்னடைவு பலரது கனவுகளைப் பாழடித்து விட்டது. ஆனால் குறிப்பிடத்தக்கதோர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் நரேந்திர மோடியை ஒரு கதாநாயகனாக்கி 2014ஆம் ஆண்டுத் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் தங்கள் இருப்பை உணரச் செய்தனர். 18-25 வயது பிரிவினரில் 68% இளைஞர்கள் வாக்களித்து சாதனை படைத்தனர். இவர்கள் 25% வாக்காளர்களை பிரதிநிதித்துவப் படுத்தினர். இது தேசிய சராசரியை விட அதிகமானது. அவர்களில் 34.4% இளைஞர்கள் மோடியின் பா.. கட்சிக்கு ஆதரவளித்தனர் என்று முன்னேறி வரும் சமூகங்கள் பற்றிய ஆய்வு மய்யம் பதிவு செய்துள்ளது. அக்கட்சிக்கு வாக்களித்த ஒட்டு மொத்த வாக்காளர்களை விட இது மூன்று புள்ளிகள் அதிகமானது. காவிக் குடையின் கீழ் உணர்ச்சிவயப்பட்ட ஆதரவைப் பெறுவதற்காக, மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த சமூக நீதியின் பொருளாதாரப் பயன் களையும் விட்டுக் கொடுப்பதற்கு விருப்பம் கொண்டவர்களாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் இருந்து வந்துள் ளனர். அவர்கள் அனைவரையும் கமண்டலத்தின் கீழ் கொண்டு வருவது என்பது பின்னர் மோடிக்கும் ஆதித்யநாத்துக்கும் இயன்றதாக, எளிதான தாகப் போய் விட்டது. விவசாயிகளை சுரண்டிக் கொழிக்கும் சீர் திருத்தம் செய்யப்படாத ஜமீன்தாரி நடைமுறையை சுற்றியே வரலாற்று ரீதியிலான உத்தரப்பிரதேச மாநில நிலப் பொருளாதாரம் மய்யம் கொண்டு சுழன்று வந்துள்ளது. நில உடைமைதாரர் களிடையே நிலவிவந்த நில உரிமையும், அவர்களது பொருளாதார பலமும், சமூக ஏற்றத்தாழ்வுகளும் .பி. மாநிலத்தில் எத்தகைய சமூக சீர்திருத்தத்தையும் மேற் கொள்வது என்பது இயலாததாகவே ஆக்கிவிட்டது. சிறீநாராயண குரு, பெரியார், ஜோதிபா பூலே போன் றவர்கள் உருவாக்கிய துடிப்பு மிகுந்த சமூக இயக்கங்கள் கேரளாவிலும், தமிழ்நாட்டிலும், மகாராட்டிராவிலும் சமூக சமத் துவத்தை மேம்படுத்தும் களங்களாக விளங்கின. அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் குறிப்பிட்டது போல திராவிட மாதிரியில், சமூக சீர்திருத்தம் வெற்றிகரமாக மக்களின் பொரு ளாதார மேம்பாட்டுடன் இணைக்கப்பட்டது போன்றோ, பொருளாதார அடித்தளத்தில் இருக்கும் மக்களை மேலே கொண்டு வரும் கேரள மாநில அரசின் மக்கள் திட்டம் போன்றோ, எந்தவொரு சமூக பொருளாதார சீர்திருத்தமும் .பி.யில் எப்போதும் மேற்கொள்ளப் படவேயில்லை.

மக்கள் படும் பொருளாதாரத் துன்பங்கள்

2016ஆம் ஆண்டு முதல் சீரழிந்து வந்த நாட்டின் பொருளாதார நிலை .பி. மக்களிடையே ஒரு பெரிய ஏமாற்றத்தையும், கடுந்துன்பங்களையும் உருவாக்கி வந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ பெரும் பாலான நாளிதழ்களிலோ எடுத்துக் காட்டப்படாத மக்களின் பொருளாதாரத் துன்பங்களும் வெகுவேகமாக வீழ்ந்து வந்த வாழ்வாதாரங்களும், சமூக கலவரங் களையும் புரட்சியையும் உருவாக்கியது.

பீமாரு என்று அழைக்கப்படுவது (BIMARU)  - பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை குறிப்பிடும் சொல், இந்தச் சொல். உத்தரப்பிரதேசம் தொடர்ந்து மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது. அதனால் மக்களின் அவலங்களும், துன்பங் களும் வெகுவாகக் கூடிக்கொண்டே சென்றன. .பி. மாநிலத்தின் வேலை செய்யும் வயதுக்கு வந்த ஒட்டு மொத்த பணியாளர்களின் மக்கள் தொகை கடந்த 5 ஆண்டுக் காலத்தில் 2 கோடி அளவில் உயர்ந்து உள்ளது. ஆனால் வேலைவாய்ப்பு பெற்றுள்ள ஒட்டு மொத்த மக்கள் தொகை 16 லட்சமாக சுருங்கிப் போனது. 2012ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வந்த காலத்தில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் அய்ந்து மடங்கு அதிகரித்தது.

.பி. மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டுத் தயாரிப்பு மதிப்பு 2017 முதல் 2020 வரையிலான ஆண்டு காலத்தில் 1.95 விழுக்காடு அளவில் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கு மாறாக 2012 முதல் 2017 ஆண்டு காலத்தில் முந்திய மாநில அரசின் கீழ் இந்த வளர்ச்சி 6.92 விழுக்காடு சதவீதமாக இருந்தது. .பி மாநில மக்கள்தொகையில் மிகப் பெரும்பான்மையினராக இருக்கும் பரம ஏழைகள் தான் பண வீக்கத் தினால் குறிப்பாக உணவுப் பொருள் பணவீக்கத்தினால் மிகப்பெரிய அளவிலான துன்பங்களுக்கு உள்ளாகினர். நிட்டி ஆயோக் தயாரித்த பன்முக வறுமை புள்ளிவிவர முதல் அறிக்கையில் உத்தரப்பிரதேச மாநிலமானது 37.79 விழுக்காடு ஏழைகளைக் கொண்ட அடிமட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள மூன்று மாநிலங்களில் ஒன்றாக வைக்கப்பட்டு இருந்தது. இது தேசிய சராசரியை விட மிக மிக அதிக அளவில் இருப்பதாகும்.

அதேபோன்று நிட்டிஆயோக் தயாரித்த சுகாதார மருத்துவ வசதிகள் பெற்றுள்ள மாநிலங்களின் பட்டி யலில் .பி. மாநிலத்தின் செயல்பாடுகள் மிகமிக மோசமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரம் கரோனா தொற்றுநோய் பாதிப்பு ஏற்படு வதற்கு முன்னதாக தயாரிக்கப்பட்டதாகும். .பி. மாநிலத்தில் கரோனா தொற்றுநோய் மேலாண்மை செயல்பாடுகள் எந்த நிலையில் இருந்தன என்று கூறுவதானால், கங்கையில் மிதந்து சென்ற உடல்கள் ஈர மணல் நிறைந்த ஆற்றுப்படுகைகளில் புதைக்கப் பட்டதைப் பற்றி விசேடமாகக் கூறலாம்.

பாதிக்கப்பட்ட .பி. மாநிலத்தின்

முறை சாராத பொருளாதாரம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள், சரக்கு மற்றும் சேவை வரி, கோவிட்-1.9 நோய்த்தொற்று ஆகியவை காரணமாக மாநிலத்தின் முறைசாரா பொருளாதார நிலை அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டது என்பதால் பொருளாதார நிலை சரிவினால் சமூகநல திட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது.

இந்த முறைசாரா பொருளாதாரம் ஒன்றுதான் .பி. போன்ற மாநிலங்களுக்கு உள்ள ஒரே பொருளாதார மாகும். மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் வேலை வாய்ப்புகளையும், வாழ்வாதாரங்களையும் தேடி பெறு மிடம் இந்த முறைசாரா பொருளாதாரம் தான். சமூக அளவில் பின்தங்கியவர்களுக்கானது இது என்பது தற்செயலாக நேர்ந்தது அல்ல. விவசாயத்துறை பொருளாதார நெருக்கடிகளுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை. மூன்று புதிய விவசாய சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியதன் காரணமாக .பி. மாநில விவசாயிகள் மிகப்பெரிய அளவில் கவலை கொண்டனர். இதனால்தான் விவசாயிகளின் போராட் டம் ,பி, மாநிலத்தில் இத்தகைய மிகப்பெரிய பாதிப்பை ஆழமாக ஏற்படுத்தியது. ஜாதிகளின் நினைவுடன் செயல்படும் நிர்வாகத்தை நடத்தும் ஒரு முதலமைச்சரின் அரசில் மக்கள் மகிழ்ச்சியின்றி பதற்றம் நிறைந்த வர்களாக இருப்பது சர்வ சாதாரணமான ஒன்றுதான். தோல்வி அடைந்த பொருளாதாரம் கொண்ட மாநிலத் தின் பொருளாதார நிலை, மிக மிக மோசமாக இருக்கிறது என்ற உணர்வைத் தூண்டி அந்த உணர்வு எரியூட் டுகிறது.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பையோ அல்லது 2011ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பொருளாதார மற்றும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பையோ மேற்கொள்ள மறுத்ததன் மூலம் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் ஜாதி மக் களையும் அவர்களின் தலைவர்களையும், பா... அரசு கோபம் ஊட்டச் செய்தது. இதுநாள் வரை இந்துத் துவாவின் கூடாரத்தில் இருந்தவர்கள் இவர்கள். 5 ஆண்டு காலத்தில் மேல் ஜாதியினரின் ஆதிக்கம் வளர்வதற்கு இது ஒரு காரணமாக ஆகிவிட்டது.

2017ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத்தில் 44.3% அளவுக்கு உயர்ஜாதி உறுப்பினர்கள் இருந்தனர். 1980க்கு பிறகு மேல்ஜாதி உறுப்பினர்கள் மிக அதிக அளவில் இடம்பெற்றது 2017இல் தான். குறைந்த அளவு பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் ஜாதி மக்களுக்கு நியாய மான அளவில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அவர்களை வகைப்படுத்து வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ரோசினியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு 12 முறை கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அலகாபாத் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராகவேந்திர குமார் தலைமையிலான சமூகநீதிக் குழுவின் அறிக்கையை மாநில அரசுக்கு 2018 அக்டோபரில்  அளித்திருந்தது என்றபோதிலும், அது இன்னமும் பரிசீலனை நிலையிலேயே உள்ளது.

ஒரு புதிய மாதிரியிலான சமூக நீதி

பா... கோட்டைக்குள்ளே இருந்து எத்தகைய மாறுபட்ட உணர்வுகள் கொண்ட குரல் தீவிரமாக ஒலிக் கப்பட வேண்டும் என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் விரும்பியது போலவே, முக்கியமான அனைத்து பிரச்சாரத்திலும், பரப்புரையிலும் ஒரு மாற்றத்திற்கான மேடை ஒன்று இப்போது அமைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் துயரங்களுடன், அழித் தொழிக்கப்பட்ட அவர்களது விழைவுகளும் சேர்ந்து மாநிலத்தின் பொருளாதார நிலை சீரழிக்கப்பட்டு விட்டது என்பதுவே இம்மாநில தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் அனுபவமாக இருக்கிறது. பொருளாதார ரீதியில் அவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது மட்டுமன்றி, ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த ஜாதிகளின் வரிசையில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் மாநிலத்தில் நடைபெறும் குற்றச் செயல்களுக்கெல்லாம் பொறுப்பாளர்கள் என்று குற்றம் சாட்டப்படுகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத் தில் கடந்த ஆண்டு நடை பெற்ற குற்றச்செயல்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் அகில இந்திய அளவில் குற்றம்சாட்டப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்களில் 25% அளவில் இருந்தனர் என்று மத்திய குற்றப்பிரிவு அமைப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் பகுஜன் சமாஜ் கட்சி மவுனம் காத்தது. அதன் விளைவாக பீகாரில் 1990களில் ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தது போலவே, தாழ்த்தப் பட்டவர்களுடன் இணைந்து ஒரு அகண்ட கூட்டணியை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்வதற்கு சமாஜ் வாடி கட்சிக்கு வழிவகுத்துக் கொடுத்தது.

திராவிட மாதிரியிலான தனது சொந்த சமூகநீதிக் கொள்கையை வகுத்துக்கொண்டு இறுதியில் உண்மை யில் ஓர் சமூக பொருளாதார மாற்றத் தினை ஏற்படுத்து வதற்கு இயன்ற ஒரு கடுமையான அரசியல் நிலைப் பாட்டை .பி. யில் மேற்கொள்ளு வதற்கு இதுவே மிகச்சரியான நேரமாகும். “பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் மொத்த மக்கள் தொகையில் 60% அளவில் இருப்பவர்கள் என் பதால், அரசியல் அதிகாரத்திலும் பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு களிலும் 60% பங்கிற்கான பயன்களை அவர்கள் பெற வேண்டும்என்று சமதர்ம கோட்பாட்டாளர் லோஹியா வின் அறை கூவலை உத்தரப்பிரதேச மாநிலத்தில் உண்மையான தாக ஆக்குவதற்கான தருணம் இதுவாகவே இருக்க முடியும். இந்த 60% என்பது அரசுப்பணி நியமனங்களில் அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டில் மட்டுமன்றி, மாநிலத் தின் பொருளாதார வளர்ச்சி, அரசியல் அதிகாரம், மாநில அரசின் பல்வேறுபட்ட அமைப்புகளிலும் இடம் பெறுவதிலும் இந்த 60% விகிதாசாரம் இருக்க வேண்டும்.

 இத்தகைய அதிர்வுகளோ, அவற்றுக்கு எதிரான 80% பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 20% உயர் ஜாதியினர் என்ற முழக்கமோ, 80% இந்துக்கள் 20% பிற மதத்தவர் என்ற இந்துத்துவக் கோட்பாடோ அல்லது ஒரே தேசம், ஒரே தலைவர் என்ற ஹிந்துத்துவா பரப்புரையோ, மக்கள் தொகை மிக அதிகமாக உள்ள .பி. மாநில அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பதையடுத்துதான் இந்திய அரசியல் மற்றொரு வேகத்தில் பயணிக்க இயலும்.

எந்த பாஞ்ச ஜைன்யத்தினாலும் அடக்கி ஒடுக்கி விட இயலாத மக்களின் குரல்கள் இவை. மார்ச் மாதத்தில் யார் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் சரி, .பி. மாநிலத்தின் இத்தகைய அனைத்து பிரச்சினை களும் அவர்களை அச்சுறுத்திக் கொண்டும் துன் புறுத்திக் கொண்டும்தான் இருக்கும்.

.பி. மாநிலம் ஒரு மாற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. உண்மையான மாற்றத்தையும், உண் மையான அதிகாரத்தைப் பெறுவதிலும், உண்மையில் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதிலும் மக்கள் மிக மிக ஆவல் கொண்டவர்களாக உள்ளனர்.

அடிமையாகவோ அடிமைத்தனமாகவோ மக்கள் நாட்டில் வாழக்கூடாது என்ற ராஜ் பர்ரின் முழக்கம் சுருக்கமானதும் பாதிப்பு மிகுந்ததும் ஆகும்.

ஒரு காவி மேடையில், ராமபிரானுக்கு சபரி செய்த தேவைகளுடன் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் மன நிறைவு அடைந்திருக்கவில்லை; ஆனால் தங்களின் அதிகாரத்தை தாங்கள் எழுத வேண்டுமென்றே அவர்கள் விரும்புகின்றனர். தங்கள் மீது மற்றவர்கள் எவரும் ஏறி மிதித்துக் கொண்டு செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அளிக்கப்படும் ஒரு பாதையின் படம் விவசாயிகளின் போராட்டத்தின்போது அளிக்கப்பட் டது போன்ற ஒரு பாதையின் படம்தான். மக்கள் தொகை மிகுந்த இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத் தினால், 2014ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய பரப்புரைக்கான கதை, வசனம் மற்றும் இலக் கணத்தையும் அளிக்க இயலும். இப்போது நடந்து கொண்டி ருக்கும் .பி. மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலின் முக்கியத் துவமே இதுதான். இவ்வாறுதான் தேர்தல் முடிவுகள் இருக்க வேண்டும் என்பது ஒன்றும் கட்டாயமானது அல்ல.

நன்றி: 'தி இந்து' 27.1.2022

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment