சென்னை, மார்ச் 4- உக்ரைனில் கல்வி கற்கும் மருத்துவ மாணவர்கள் முழு மையாகத் தாயகம் திரும்பிய பிறகு, அவர்களின் கல்வியை எவ்வாறு தொடர்வது என்பது குறித்து முதல மைச்சருடன் கலந்தாலோசித்து முடி வெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறி வுறுத்தலின்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை யில் நேற்று (3.3.2022) நடைபெற்ற உலக காது கேட்கும் நாளில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
2016 ஆம் ஆண்டிலிருந்து உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின் படி இந்நாள் உலக காதுகேட்கும் நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு காது கேட்கும் நாளின் கருவாக பொழுதுபோக்குக்காக அதி கப்படியான ஒலியை நீண்ட நேரம் கேட்பதினால் கேட்கும்திறன் பாதிப்பு வரும் என்ற செய்தியை பள்ளி, கல் லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர் களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
உலக அளவில் காதுகேளாதோர் 46.6 கோடி பேரும், இந்திய அளவில் 6.3 கோடி பேரும், தமிழகத்தில் 50 லட்சம் பேரும் உள்ளனர். தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை காது கேளாத குழந்தைகள் மற்றும் பெரிய வர்கள்வரை பல்வேறு உதவிகளை அவர்களுக்குச் செய்துவருகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கை களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகியுள்ளது. 92 சத வீதம் பேர் முதல் தவணை தடுப் பூசியும், 72 சதவீதம் பேர் 2ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தி யுள்ளனர். வரும் 5ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் 23ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிலவுவதால் அங்கு மருத்துவம் பயிலும் தமிழ்நாடு மாணவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வரு கிறது. மாணவர்கள் முழுமையாக தாயகம் திரும்பிய பிறகு, அவர்கள் கற்கும் மருத்துவக் கல்வியைஎவ்வாறு தொடர்வது என்பதுகுறித்து முதல மைச்சர் தலைமையில் கலந்தா லோசித்து முடிவெடுக்கப்படும்.
-இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வின்போது சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக் குநர் குருநாதன், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment