ஹலோ டாக்டர் என்ற புதிய திட்டம் தொடக்கம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

ஹலோ டாக்டர் என்ற புதிய திட்டம் தொடக்கம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, மார்ச் 30- சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் ஹலோ டாக்டர் என்ற புதிய செயல் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்   துவக்கி வைத்தார். 

இந்த திட்டத்தின் மூலமாக நோயாளிகள் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் வகையில்,  முறையான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை நெறிமுறைகளோடு மெய்நிகர் முறையில் மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவது, வயது முதிர்ந்த நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கவும், தீவிர நோயாளிகளுக்கு வீடு தேடி வந்து மருத்துவர் மற்றும் செவிலியர் அடங்கிய குழுவால் பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என இம்மருத்துவ குழுமத்தின் தலைவர் டாக்டர் பி.ரவிபச்சமுத்து தெரிவித்தார்.

இத்திட்டத்தை துவக்கி வைத்த பின் மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருகிறது. அந்த வகையில் சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் ஹலோ டாக்டர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  மருத்துவ துறையில் பல திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னோடியாக சென்னை மாநகராட்சி தொடங்கி இருக்கிறது. தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கப்பட்ட சிறப்பாக செயல்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நேற்று வரையும் 57 லட்சத்து 1 ஆயிரம் பேர் பயன்பெற்று இருக்கிறார்கள் . தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த ஒரு மாநிலத்திலும் நாட்டிலும் வீட்டிற்கு சென்று மருத்துவம் வழங்கும் திட்டத்தை தொடங்கவில்லை என்றார்.

இந்நிகழ்வில் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.


No comments:

Post a Comment