ரஷ்ய பெரும் பணக்காரரின் ஜெட் விமானங்களை பறிமுதல் செய்தது இங்கிலாந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 28, 2022

ரஷ்ய பெரும் பணக்காரரின் ஜெட் விமானங்களை பறிமுதல் செய்தது இங்கிலாந்து

லண்டன், மார்ச் 28- ரஷ்யாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களுள் ஒருவ ரான யூஜின் ஷிவிட்லருக்கு சொந் தமான இரண்டு ஜெட் விமானங் களை இங்கிலாந்து பறிமுதல் செய் துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதலை தொடுத்து ஏறக்குறைய ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் மேலை நாட்டு அரசாங்கங்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதி னுக்கு நெருங்கிய ஆதரவாளர் களின் ஆடம்பர வாழ்க்கையை குறிவைத்து அவர்களுக்கு அழுத் தம் கொடுத்து வருகின்றன.

ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் மீது புதிய தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரை னில் போரை ஆதரித்தவர்களுடன் ஷ்விட்லருக்கு இருந்த தொடர் புகள் காரணமாகவும், புதின் ஆட் சிக்கு அவர் அளித்த ஆதரவில் இருந்து அவர் லாபம் அடைந்த தாலும் ஷ்விட்லரின் விமானங் களை பிரிட்டன் அரசு பறிமுதல் செய்துள்ளது.

இதுகுறித்து கருவூல செயலா ளர் கிராண்ட் ஷாப்ஸ், மூன்று வார விசாரணைக்குப் பிறகு, கால வரையின்றி விமானங்கள் தடுத்து வைக்கப்படும். புதினின் ஆட்சியில் கோடிக்கணக்கில் சம்பாதித்த அவ ரது நண்பர்கள், அப்பாவி மக்கள் சாகும்போது ஆடம்பரங்களை அனுபவிக்க மாட்டார்கள் என்று கூறினார்.

No comments:

Post a Comment