தமிழ்நாட்டில் 10 புதிய அரசு 'கலை மற்றும் அறிவியல்' கல்லூரிகள் அமைச்சர் முனைவர் க.பொன்முடி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 12, 2022

தமிழ்நாட்டில் 10 புதிய அரசு 'கலை மற்றும் அறிவியல்' கல்லூரிகள் அமைச்சர் முனைவர் க.பொன்முடி அறிவிப்பு

சென்னை, ஏப் 12- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (11.4.2022) நடந்த உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது,  ரூ.166.50 கோடி மதிப்பீட்டில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குதல், அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக் குதல், ரூ.50 கோடி மதிப்பீட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா தொடங்குதல் உள் ளிட்ட   பல்வேறு முக்கிய அறிவிப்பு களையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள நிதி விவரங்களையும் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார். அதில் இடம் பெற்ற  முக்கிய அறிவிப்புகள்:

கிராமப்புற மாணாக்கர்களுக்கு அரசு கல்லூரிகள் சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தருகின்றன. அரசு பள்ளி களில் பயிலும் மாணவிகள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1000/ வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. எனவே, அரசு கல்லூரிகளின் தேவை அதிகரித்துள்ளதால், கீழ்க்காணும் இடங்களில் ரூ.166.50 கோடி மதிப் பீட்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்:

மணப்பாறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், செஞ்சி, விழுப்புரம் மாவட் டம், தளி, கிருஷ்ணகிரி மாவட்டம், திருமயம், புதுக்கோட்டை மாவட்டம், அந்தியூர், ஈரோடு மாவட்டம், அரவக் குறிச்சி, கரூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டி யார்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம், வடலூர், கடலூர் மாவட்டம், சிறீபெ ரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

— பரமக்குடி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப் படும்

— அரசு கல்லூரிகளில் உள்கட்ட மைப்பு வசதிகள் உருவாக்கப்படும்

2022-_2023 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அரசு கல்லூரிகளின் உள்கட் டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ரூ.200 கோடி செலவினத்தில், 26 அரசு பல வகை தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் 55 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேற் கொள்ளப்படும்.

— அரசு கல்லூரிகளில் ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் நவீனப்படுத்தப்படும்

— அரசு பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டு வசதிகள் மேம்படுத் தப்படும்

— அரசு பொறியியல் கல்லூரிகளில் அயல்நாட்டு மொழிகள் மய்யம் நிறுவப்படும்

— அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்

— தொழில்நுட்பக் கல்வி இயக்ககத் தில் திட்ட கண்காணிப்பு மய்யம் ஏற் படுத்தப்படும்

— மதுரை அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் புரோடோசெம் புத்தாக்க பாடப்பிரிவு தொடங்கப்படும்.

— செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக் காக முதுகலை வணிகவியல் பாடப் பிரிவு சென்னை, மாநிலக் கல்லூரியில் தொடங்கப்படும்

சென்னை - மாநிலக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் பாடப்பிரிவு செவித்திறன் குறைபா டுள்ள மாணவர் களுக்கு 2007 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இப்பாடப்பிரிவில் பயி லும் மாணாக்கர்கள் முது கலை படிப்பதற்கும், வேலை வாய்ப்பை அதிகரிப்பதற் கும் முதுகலை வணிக வியல் பாடப்பிரிவு 2022-_2023ஆம் கல்வியாண்டு முதல் தொடங் கப்படும். 

புதுக்கோட்டை மாமன்னார் கல் லூரியில் புதிய நூலகக் கட்டடம் கட் டப்படும்.

— அழகப்பா பல்கலைக்கழக வளா கத்தில் மாணாக்கர்கள்/ ஆராய்ச்சியா ளர்களுக்கு விடுதி கட்டப்படும்.

— பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவிகளுக்கு இரண்டு விடுதிகள் கட்டப்படும்.

— அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் மாணவியர்களுக்கான விடுதி கட்டப்படும்.

— சென்னைப் பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் புதிய விடுதி கட்டப்படும்.

— பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் மகளிர் விடுதி கட்டப்படும்.

— அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொண்டி வளாகத்தில் கடல்சார் விளை யாட்டு மய்யம் அமைக்கப்படும்

— அண்ணா பலகலைக்கழக மாணாக்கர்களின் தொழிற்திறன்களை மேம்படுத்த புதிய பாடப்பிரிவு அறி முகப்படுத்தப்படும்

மாணாக்கர்களின் தொழிற்திறன் களை மேம்படுத்துவதற்காக பிஇ, பி.டெக், எம்சிஏ படிக்கும் மாணாக்கர் களுக்கு மிஙிவி நிறுவனத்துடன் இணைந்து புதிய பாடப்பிரிவு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் ரூ.6 கோடி நிதியுதவியுடன் அண்ணா பல்கலைக் கழகத்தில் தொடங்கப்படும்.

— தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப்படிப்பு (ஞிவீஜீறீஷீனீணீ) படித்தவர் களுக்கு பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம் பயிலுவதற்கான திட்டம்.

— அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணாக்கர் சேர்க்கை.

— அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா நிறுவப்படும்.

மேனாள் மாணாக்கர்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன் இணைந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், ஆராய்ச்சி பூங்கா ரூ.50 கோடி மதிப் பீட்டில் நிறுவப்படும்.

தொழில் நிறுவனங்கள் சார்ந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள், அடை காப்பு மய்யங்கள் (Incubation Centres)  இங்கு அமைக்கப்படும். இதன் மூலம், சுமார் 20,000 இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணாக் கர்கள் பயன்பெறுவர்.

— தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் பயிலும் சிறைக் கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற வித வைகளுக்கு கட்டண விலக்களிக் கப்படும்.

சிறைக் கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் கட்டணமின்றி பயின்று பட்டம் பெறும் திட்டம் அறிமுகப் படுத்தப்படும்.

No comments:

Post a Comment