101 வயதிலும் தீராத கல்வித்தாகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

101 வயதிலும் தீராத கல்வித்தாகம்

அமெரிக்காவின் வர்ஜீனியா நகரைச் சேர்ந்தவர் பிட்மேன் கூப்பர். இவர் உலகப்போர் உள்ளிட்ட காரணங்களினால் அடிக்கடி இடம்பெயர்ந்ததால் கல்வி கற்காமலே விட்டுவிட்டார். இந்த நிலையில் தனது நூற்றாண்டு விழாவில் பட்டம் பெற்றே தீருவேன் என்று உறுதி எடுத்து வர்ஜீனியப் பல்கலைக்கழகத்தில் தனது நூற்றாண்டு பிறந்த நாள் விழாவோடு பட்டமளிப்பு விழாவையும் கொண்டாடியுள்ளார்.

 நிறவெறி அதிகம் இருந்த காலகட்டத்தில் வர்ஜீனியா பகுதியில் பிறந்தவர் பிட்மேன்கூப்பர் மெரில், அக்காலகட்டத்தில் கருப்பினக் குழந்தைகளுக்கு தேவாலய கல்வி வகுப்புகளில் மட்டுமே கல்வி போதிக்கப்பட்டு வந்தது. 

 கருப்பினத்தவர்களுக்கு என்று தனிப் பள்ளிகள் கிடையாது. பொதுப்பள்ளியில் அவர்கள் சேரவும் முடியாது. இந்த நிலையில் உலகப்போர் காலகட்டத்தில் அவர்கள் குடும்பம் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தது. அதனால் இவர் கல்வி கற்க முடியாமல் போனது. ராணுவத்தில் சேர்ந்து பிறகு போக்குவரத்து துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற போதும் அவருக்குத் தான் கல்வி கற்று பட்டம் பெறவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. இதனை அடுத்து அவர் 2015 ஆம் ஆண்டு வர்ஜீனியப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்காக சேர்ந்தார். பலமுறை தேர்வு எழுதியும் அவரால் வெற்றி பெற முடியாமல் இருந்தது, இந்த நிலையில் தனது நூற்றாண்டு விழாவில் பட்டதாரியாக பட்டமேற்பேன் என்று சூளுரைத்து நன்கு படிக்கத் துவங்கினார். 

அவரது கல்விக்கு பல்கலைக்கழகம் மற்றும் மாணவர் அமைப்புகள் ஊக்கம் கொடுத்தனர்.  இதன் மூலம் அவர் தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் வாங்கினார். கூப்பரின் கனவை நனவாக்க உதவியதில் பெருமிதம்  கொள்வதாக அவர் படித்த பள்ளி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவை தெரிவித்துள்ளன.


No comments:

Post a Comment