எகிறுது எகிறுது பெட்ரோல், டீசல் விலை : 14ஆவது நாளாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

எகிறுது எகிறுது பெட்ரோல், டீசல் விலை : 14ஆவது நாளாக உயர்வு

சென்னை, ஏப்.7 -பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. நேற்றும் 14ஆவது நாளாக அதன் விலை லிட் டருக்கு 76 காசு அதிகரித் திருந்தது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் (மார்ச்) 22ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்பட்டு வருகிறது. இடையில் கடந்த மாதம் 24ஆம்தேதியும், கடந்த 1ஆம் தேதியும் மட்டும் விலை மாற்றம் இல்லாமல் இருந்து, மற்ற அனைத்து நாட்களிலும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக் கிறது. 

அந்த வகையில் நேற்று  (6.4.2022) 14ஆவது நாளாக பெட்ரோல் -டீசல் விலை அதிகரித்து இருந்ததை பார்க்க  முடிந்தது. அதன்படி, பெட்ரோல் நேற்று லிட்ட ருக்கு 76 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 110 ரூபாய் 85 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல், டீசல் லிட்ட ருக்கு 76 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 100 ரூபாய் 94 காசுக்கு விற்பனை ஆனது.

இதில் பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வரு கிறது. டீசல் விலையை பொறுத்த வரையில், இன் னும் ஓரிரு நாட்கள் விலை அதிகரித்தால், புதிய உச் சத்தை தொட்டுவிடும் என்றே கூறப்படுகிறது. 

கடந்த 14 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 9 ரூபாய் 45 காசும், டீசல் லிட் டருக்கு 9 ரூபாய் 51 காசும் விலை அதிகரித்து இருக் கிறது. தொடர்ந்து விலை உயர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் பல்வேறு பொருட்களில் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்ப தால், என்னென்ன பொருட் களின் விலை அதிகரிக்கப் போகிறதோ? என பொது மக்களும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எண்ணி வாகன ஓட்டிகளும் கவலை அடைந்துள்ளனர்.

 

No comments:

Post a Comment