கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் பதவியேற்பாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 19, 2022

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் பதவியேற்பாம்!

கொழும்பு, ஏப்.19 - இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான பொரு ளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி, அத்தியா வசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை என இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது.

நாள்தோறும் பலமணி நேர மின்வெட்டு, மருந்துகள் இல் லாமல் முடங்கிய மருத் துவமனைகள், பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் எரிவாயு வினி யோக மய்யங்களில் நாட் கணக்கில் காத்திருக்கும் மக்கள் என இலங்கையின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.  

இலங்கையின் இந்த பொரு ளாதார நெருக்கடி, அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அரசிலும் எதிரொலித்தது. இந்த சிக்கலில் இருந்து நாட்டை மீட்க முடியாத அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வரு கின்றன.  அதேநேரம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒற்றுமை அரசை அமைக்க வசதியாக, இந்த மாத தொடக் கத்தில் ராஜபக்சே அமைச்சரவை கூண்டோடு பதவி விலகியது. நிதி அமைச்சர் பசில் ராஜபக் சேவின் பதவி பறிக்கப்பட்டது.

பின்னர் 3 அமைச்சர்கள் நிய மிக்கப்பட்டனர். மேலும் புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டார். ஆனால் ஒரே நாளில் பதவி விலகிய அவர், பின்னர் மீண்டும் பதவியை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஒற்றுமை அரசில் பங்கேற்க வருமாறு அனைத்துக்கட்சிகளுக்கும் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார். 

ஆனால் இதை புறக்கணித்த எதிர்க்கட்சிகள், அதிபர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இதனால் புதிய அமைச்சரவை அமைவதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில் சுமார் 2 வாரங்களுக்குப்பிறகு 17 புதிய அமைச்சர்களை நேற்று (18.4.2022)  கோத்த பய ராஜபக்சே நியமித்தார். அவர்களும் உடனடியாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த புதிய அமைச்சரவையில் ராஜபக்சே குடும்பத்தினர் யா ருக்கும் இடம் அளிக்கப்பட வில்லை. இதன் மூலம் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவர் மட்டுமே தற்போது இலங்கை அரசில் நீடித்து வருகின்றனர். இதைப்போல மூத்த உறுப்பி னர்களுக்கு பதி லாக இளைய நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்க கோத்தபய விரும்பினார். 

அதன்படியே பல புதுமுக உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

நாட்டில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த புதிய அமைச்சரவை என்ன தீர்வுகளை பரிந்துரைக்க உள்ளது என்பது போகப்போக தெரியும். இதற்கிடையே கோத் தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இலங்கை மக்கள், புதிய அமைச்சரவைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

ராஜபக்சேக்கள் உடனடி யாக பதவி விலக வேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தி வரு கின்றனர். அவர்கள் அன்றாடம் அனுபவித்து வரும் துன்பங் களை மேலும் அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகிய அஜித் நிவார்ட் கப்ரால் வெளி நாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அத் துடன் வருகிற 2-ஆம் தேதி விசார ணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் கொழும்பு  நீதிமன்றம் உத்தர விட்டு உள் ளது.

இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் பதவியேற்ற சில மணி நேரங்களில் 21 இணை அமைச்சர்களும் பதவியேற்ற னர். அவர்களுக்கு கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சர்களில் முக்கியமாக ராணுவ இணை  அமைச்சராக ஜி.எல்.பெய்ரீஸ் பதவி யேற்றுக் கொண்டார்.


No comments:

Post a Comment