தமிழ்நாட்டைச் சிறந்த மாநிலமாக்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபடுகிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 24, 2022

தமிழ்நாட்டைச் சிறந்த மாநிலமாக்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபடுகிறார்

இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா புகழாரம்


சென்னை, ஏப்.24- "தமிழ்நாட் டைச் சிறந்த மாநிலமாக உயர்த் தப் பாடுபட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன். தொற்றுநோயால் பாதிக்கப் பட்ட வழக்குரைஞர்களின் குடும்பத் தினருக்கு உதவி செய்த அவருடைய செயலால் நெகிழ்ச்சி அடைந்துள்ளேன்" என்று இந்தியாவின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் நேற்று (23.4.2022) சென்னை உயர்நீதிமன்ற விழாவில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்குப் புகழாரம் சூட்டினார்.

விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் பேசியதாவது:-

இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு நான் சென்னை உயர்நீதி மன்றத்தில் கலந்துகொள்ளும் முதல் வருகை இதுதான். ஏற் கெனவே ஒரு முறை சென்னை வந்தபோதும், சென்னையிலி ருந்து திருப்பதி சென்றுவிட் டேன்.

தென்னிந்தியாவின் வாயிலாக விளங்கும் சென்னை, கலாச் சாரத்தின் தலைநகராகவும் விளங்குகிறது.

தொற்றுநோய் கட்டுப்பாட் டுக் காலத்தில் பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்களுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு உதவி களை வழங்கியிருப்பது அறிந்து நெகிழ்ச்சி யடைந்தேன்.

சிறு வயதில் நான் தமிழ் நாட்டுக்கு வந்தபோது 1960-65ஆம் ஆண்டுகளில் நடந்த மொழிப் போராட்டம் நன்கு நினைவில் உள்ளது. மொழி-கலாச்சாரத்தைக் காப்பாற்று வதில் தமிழர்கள் முன்னணியில் உள்ளனர். துரித உணவுகளைப் போல் மக்கள் துரிதமான நீதியையும் எதிர்பார்க்கிறார்கள்.

பில்டர் காபியில் இருந்து, இன்ஸ்டன்ட் காபிக்கு மக்கள் மாறிவிட்டனர். காலங்கள் மாறிவிட்டது. 5 நாள் கிரிக்கெட்டில் இருந்து 20-20 கிரிக்கெட்டுக்கு மக்கள் மாறிவிட்ட னர். தமிழ் நாடு பார் கவுன்சில்தான் நீதித் துறையின் அனைத்து விவகாரங் களையும் முதலில் முன்னெடுத்து செல்கிறது.

சமூக உண்மையை நீதிபதிகள் உணர்ந்து இருக்க வேண்டும்

சமூக உண்மையை நீதி பதிகள் உணர்ந்து இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணும் போது கண்மூடிச் சட்டத்தை மட்டும் நீதிபதிகள் சார்ந்திருக்கக் கூடாது. மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்.

தற்போது 1,100 நீதிபதிப் பணி யிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் 88 நீதிபதிகளுக்கான பெயர்கள்தான் பரிந்துரை செய்யப் பட்டுள்ளன. எனவே, உயர்நீதிமன் றங்கள் தகுதியான நீதிபதிகளின் பெயர்களை விரை வாகப் பரிந் துரைத்து அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நீதித் துறை கட்டமைப்பு களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை!

180 நீதிபதிகளின் பெயர்களை நாங்கள் பரிந்துரை செய்தோம். அவர்களில் 124 பேர் நியமனம் செய்யப்பட்டுவிட்டார்கள். 54 பெயர் கள் பரிசீலனையில் உள்ளன.

நீதித்துறைக் கட்டமைப்பு களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக் கிறது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய நீதித் துறையை மேம்படுத்த வேண்டியது அவ சியம். தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி உள்ளூர் மொழி களை வழக் காடுமொழியாக்க நட வடிக்கை எடுக்கப்படும். ஒருவர் நீதித்துறையில் வருவதற்கு மொழி, இனம், ஜாதி, மதம், என எதுவும் தடையாக இருக்கக் கூடாது. பின்தங்கிய பகுதியில் இருந்து வரும் நீதிபதி களால் தான் மக்கள் பிரச்சி னைகளைப் புரிந்து தீர்க்க முடியும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர் கள் நீதித்துறையுடன் இணைந்து செயல்படுவதாகவும் அதன் தேவை களை உடனுக் குடன் நிறைவேற்றித் தருவதா கவும், சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி பண்டாரி அவர்கள் தெரிவித்தார்கள்.

கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்படும்!

ஆணுக்குப் பெண் நிகராக இருப்பதால் சமுதாயம் ஏற்ற மடை யும் என்று பாரதியார் பாடினார். நீதித்துறையிலும் பெண்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று தமிழ் நாடு முதல் அமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையாகப் பாடுபட்டு வரு கிறார். அவரைப் பாராட்டு கிறேன். அவர் வைத்த கோரிக் கைகள் விரைவில் பரிசீலிக்கப் படும். இவ்வாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் உரை யாற் றினார்.


No comments:

Post a Comment