அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்க! பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்க! பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை,ஏப்.7- “அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களுக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினைக் (CUET) கட்டாயமாக்கும் நடவடிக் கையை உடனடியாகத் திரும்பப் பெற்றிட வேண்டும்” - என வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு, அனைத்து மத்தியப் பல்கலைக் கழகங்களிலும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர் வினைக் கட்டாயமாக்கும் நடவடிக் கையைத் திரும்பப் பெற்றிட வேண்டு மென்று வலியுறுத்தி நேற்று (6-.4.2022) கடிதம் எழுதியுள்ளார். 

அக்கடிதத்தில், 2022_-2023 ஆம் கல்வியாண்டு முதல், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும், பல்வேறு படிப்பு களுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (National Testing Agency-NTA) நடத்தும் பொது பல் கலைக் கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Examination -C.U.E.T.)   மூலம் மட்டுமே நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித் துள்ளதையும், பொது பல் கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாநிலப் பல்கலைக் கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள தையும் முதலமைச்சர்  சுட்டிக்காட்டியுள் ளார். 

ஒன்றிய அரசின் பிற்போக்குத்தன நடவடிக்கை! 

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதோடு மட்டு மல்லாமல், உயர்கல்வி மாணவர் சேர்க் கையிலும் நுழைவுத் தேர்வை கொண்டு வரும் ஒன்றிய அரசின் முயற்சி இது என தமிழ்நாடு அரசு கருதுகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய பிற்போக்குத்தனமான நடவடிக்கை இதனைத் தெளிவாக நிரூபணம் செய்துள்ளது. நீட் தேர்வைப் போலவே இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் ஒட்டு மொத்த மேம்பாடு சார்ந்த நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப் பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப் பெண்களை அதிகரிக்க பயிற்சி மய்யங் களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற் படுத்திவிடும் என்பதில் அய்யமில்லை என்றும்; தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பாடத் திட்டத்தை அடிப்படை யாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என் பதை மீண்டும்தான் வலியுறுத்துவ தாகக் குறிப்பிட்டுள்ளார். 

மறைமுக அழுத்தம்! 

பெரும்பாலான மாநிலங்களில், மொத்த மாணவர்களில் 80 விழுக் காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள். இந்த மாணவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்களாவர். எனவே, NCERT  பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு, மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்குத் தகுதி யான பெரும்பான்மை யினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவ தோடு, இந்தச் சூழ்நிலை நம் நாட் டிலுள்ள பல்வேறு மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப் புக் கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக் கும் என்றும்; 

'நீட்' தேர்வைப் போலவே, பொது பல்கலைக் கழக நுழைவுத் தேர்வும், கிராமப்புற ஏழை மாணவர்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களின் நலன்களுக்கு எதிராக இருக்கும் என்ப தோடு, மாணவர்களுக்கான பயிற்சி மய்யங்கள் மேலும் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமை யும் என்று தமிழ்நாடு மக்களிடையே அச்சம் எழுந்துள்ள தாகவும் தமிழ்நாடு முதலமைச்சர்  தனது கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார். 

பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முறையினைப் பின்பற்றுவதற்கு, பல்கலைக்கழக மானியக் குழு கொண் டுள்ள மறைமுக அழுத்தம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் அல்லாதவற்றின் மீது மாணவர்களின் சேர்க்கையை மய் யப்படுத்தும் செயல்முறையை இன்னும் வலிமையாக்கும் என்று தாங்கள் கருது வதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், காலப்போக்கில் இது NCERT பாடத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் விலை யுயர்ந்த பள்ளிகளைத் தேர்வுசெய்ய மாணவர்களைத் தள்ளுவ தன் மூலம், மாநிலப் பாடத்திட்ட அடிப்படையி லான பள்ளிக் கல்வி முறையைக் குறைத்து மதிப்பிட வழி வகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

விரும்பத்தகாத நடவடிக்கை! 

அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களுக்கும்  CUET- அய்க் கட்டாய மாக்கும் இந்த நடவடிக்கை, மாநில அரசுகளின் பங்கினையும், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் பள்ளிக் கல்வி முறையின் முக்கியத் துவத்தையும் ஓரங்கட்ட முயற்சிக்கும் ஒன்றிய அரசின் தற்போதைய போக்கு மற்றொரு விரும்பத்தகாத நடவடிக்கை என்றே தாங்கள் கருதுவதாகக் குறிப் பிட்டுள்ள தமிழ் நாடு முதலமைச்சர் , மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக் கையை உடனடியாகத் திரும்பப் பெற் றிட வேண்டுமென்று பிரதமர் அவர் களைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

இவ்வாறு அரசின் செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment