ஓசூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தோழர் துக்காராம் அவர்களுக்கு நமது வீர வணக்கம் ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 20, 2022

ஓசூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தோழர் துக்காராம் அவர்களுக்கு நமது வீர வணக்கம் !

ஓசூர் நகரில் சில ஆண்டுகாலமாக வாழ்ந்து வந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு. தோழர் துக்காராம்  

(வயது 81) அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக  இன்று (20.4.2022) காலமா னார் என்ற அதிர்ச்சிக்குரிய செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைகிறோம். 

கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவராக நீண்ட காலம் இருந்து தொண்டாற்றியவர். வக்கீல் குமாஸ்தாவாக பல ஆண்டு பணியாற்றி பிறகு ஒரு தொழிலதிபராக - உழைப்பினால் உயர்ந்த கொள்கை வீரர்.

அவரது குடும்பமே சுயமரியாதைக் குடும்பம். அவரை கடைசியாக சந்தித்த போது கூட நலம் விசாரித்து பெருமைப்படுத்தி மகிழ்ந்தோம்.

எதையும் கொள்கைப்பூர்வ அணுகுமுறையுடன், நிதானத்துடன் அணுகும் ஆற்றலாளர் அவர். 

அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, இயக்கத்திற்கும் பேரிழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் அவரது அன்பு  வாழ்விணையர், மகன், மகள், உறவினர்,  இயக்கத்தவர் அனைவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு நமது வீரவணக்கம்.


 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

20-4-2022


No comments:

Post a Comment