இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்புச் சலுகை ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்புச் சலுகை ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

புதுடில்லி, ஏப்.7-  இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர் களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை வழங்கி உள் ளதாக ஒன்றிய வெளியுற வுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறியுள்ளார். 

உக்ரைன் மீதான ரஷி யாவின் தாக்குதல் கடந்த 42 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. உக் ரைனின் பல்வேறு பகுதி களைக் கைப்பற்றி வரும் ரஷியப்படையினர் உக்ரைன் மக்களையும் தாக்குவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.

குறிப்பாக, உக்ரைனின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகக் கைப்பற்ற ரஷியா தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருதால் போரால் பலரும் இயல்பு வாழ்வை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைனி லிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் படிப்பை நிறைவு செய்ய ருமேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் கஜகஸ் தான் ஆகிய உக்ரைனின் அண்டை நாடுகளில் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவுத் துறை அமைச் சர் எஸ்.ஜெய்சங்கர் மக்கள வையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா திரும் பிய மருத்துவ மாணவர் களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை வழங்கி உள்ள தாகவும் மருத்துவக் கல்வியை முடிக்க ஓராண்டு தளர்வு வழங்கியது உக்ரைன் அரசு என்றும் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத் துவ மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை  எடுக் கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசுகையில்,  இராஜதந்திரத்தைப் பொறுத்தவரை, போர்களை உடனடியாக நிறுத்துவதற் கும் வன்முறைக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கும் இந் தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. உக்ரை னுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த் தைகளை நாங்கள் ஊக்குவிக் கிறோம். இரு நாட்டின் தலை வர்களிடமும். இது தொடர் பாக பிரதமர் அவர்கள் இருவரிடமும் பேசினார்.

ரஷிய வெளியுறவு அமைச் சர் செர்ஜி லாவ்ரோவ் டில்லி வந்த போது அவருக்குத் தெரிவிக்கப்பட்ட செய்தி இதுதான். போர் தொடர் பான விஷயத்தில் இந்தியா ஏதேனும் உதவி செய்ய முடிந் தால், நாங்கள் பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைவோம் என் றார். 


No comments:

Post a Comment