பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு இந்திய மருந்தியல் பட்டதாரிகள் கூட்டமைப்பு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு இந்திய மருந்தியல் பட்டதாரிகள் கூட்டமைப்பு பாராட்டு

திருச்சி, ஏப்.28 இந்திய மருந்தியல் பட்டதாரிகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மருந்தியல் கல்வி நுழைவுத் தேர்விற்காக (நிறிகிஜி) மருந்தியல் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இணைய வழியில் இலவச பயிற்சியினை நடத்தியது. 

இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வரும் மருந்தாக்க வேதியல்துறைத் தலைவருமான முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர்த. சிறீ.விஜய கிருபா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான மருந்தியல் பயிற்சியினை வழங்கினர். இக் கல்விச் சேவையினை இந்திய மருந்தியல் பட்டதாரிகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி சிறப்பித்தது. 

இந் நிகழ்ச்சி 24.04.2022 அன்று சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது. இந்திய மருந்தியல் பட்டதாரிகள் கூட்டமைப்பின் தலைவர்  ஆர். நாராயணசாமி மற்றும் தமிழ்நாடு மருந்தியல் கழகப் பதிவாளர் முனைவர் எம். தமிழ்மொழி ஆகியோர் கலந்து கொண்டுபாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தனர்.

பாராட்டுச் சான்றிதழ் பெற்ற பேராசிரியர்களை கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

No comments:

Post a Comment