தஞ்சாவூர், ஏப்.6 - பசுமைப் பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தலைசிறந்த கல்வி நிறுவனம் பெரியார் மணியம்மை தொழில் நுட்ப நிறுவனம் என்ற சான்றிதழை ஒன்றிய அரசின் கீழ் வரும் ஆற்றல் வளங்களைக் கண்டறியும் கல்வி நிறுவனம் தந்துள்ளது
ஆற்றல் வளங்களை கண்டறியும் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ”சஸ்டைனபிள் இன்ஸ்ட்டிடியூசன் ஆப் இந்தியா” என்ற கல்வி நிறுவனம் பசுமைக்கல்வி நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த கல்வி நிறுவனத்திற்கான "சர்டிபிகேட் ஆப் எக்ஸலன்ஸ்" என்ற பெயரில் சிறந்த பசுமைப் பராமரிப்பு கல்வி நிறுவனம் என்ற பெருமையை பெரியார் மணியம்மை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது. பெரியார் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தொழிற்கல்வி உட்பல பல நவீன கல்விமுறைகளை கற்றுக்கொடுப்பதோடு காலத்திற்கு ஏற்றவாறு பசுமைப்பராமரிப்பு மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வையும் கல்வி கற்கும் மாணவர்களிடையே கொண்டு சேர்ப்பதையும் முக்கியத்துவப் படுத்தி வருகிறது.
இதனடிப்படையில் இந்தியாவில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில்
18 ஆவது இடத்தினை பெரியார் மணியம்மை தொழில்நுட்ப கல்வி நிறுவனம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment