சிட்டி ஆப் விக்டோரியா, ஏப். 5- சீனா ஆளு கைக்கு உள்பட்ட தன்னாட்சி பிரதேசம் ஆக ஹாங்காங் உள் ளது. இதன் தலைவராக கேரி லாம் உள்ளார். கடந்த ஜூன் 2019ஆம் ஆண்டில், ஹாங்காங் நகரில் உள்ள மக்களை சீனா வுக்கு நாடு கடத்த அனுமதிக்கும், முன்மொழியப்பட்ட மசோதா வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல் லாயிரக்கணக்கானோர் தெருக் களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஹாங்காங்கில், அரசியல் உறுதித் தன்மையற்ற நிலை ஏற்பட்டது. பல மாதங்கள் வரை எதிர்ப்புகள் நீடித்து வந் தன. அவ்வப்போது, வன்முறை யும் வெடித்தது. இதனையடுத்து, லாம் பதவி விலக வேண்டும் என்ற முழக்கமும் எழுந்தது.
கடந்த 2 ஆண்டுகளில் கரோனா பாதிப்பு, உணவுப் பொருள் தட் டுப்பாடுக் காரணமாக மக்கள் அங்கு பெரிதும் பாதிக்கப்பட் டனர்.
சீனாவில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட ஒரே காய் கறியான முட்டைகோஸை சமைத்து சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் ஹாங்காங் மக் கள் உள்ளனர். விரைவில் முட்டை, இறைச்சி உள்ளிட் டவை ஹாங்காங்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என சீனா தெரிவித்தது.
ஹாங்காங் தலைவர் பதவிக் கான தேர்தல் நடைபெற இருந்த நிலையில், கரோனா பரவலை கருத்தில் கொண்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலை யில், வருகிற மே 8ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவானது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. எனினும், 2ஆவது முறையாக பதவியில் தொடரப் போவதில்லை என கேரி லாம் கூறியுள்ளார்.
இதுபற்றி ஹாங்காங் தலை வர் லாமிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்து பேசும்போது,
எனது இந்த முடிவு முழு வதும் குடும்ப சூழலை கவனத்தில் கொண்டது என்று அவர் கூறியுள்ளார். இதனை மக்களின் அரசிடம் கூறியுள்ளேன். அவர் கள் புரிந்துணர்வை வெளிப்படுத் தியுள்ளனர் என்று அவர் கூறி யுள்ளார்.
அதனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரும் தலைவர் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறி யுள்ளார்.

No comments:
Post a Comment