பெரியார் பாலிடெக்னிக்கில் பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 13, 2022

பெரியார் பாலிடெக்னிக்கில் பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி திறந்து வைத்தார்

வல்லம், ஏப்.13 -பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில்  புதிதாக அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு மைதானம்  கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களால் 9.4.2022 அன்று துவக்கி வைக்கப்பட்டது. 

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் விளையாட்டுத் துறையின் கீழ் டென்னிஸ் விளையாட்டு மைதானத்துடன், கைப்பந்து மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுக்கள் அடங்கிய பல்நோக்கு விளையாட்டு மைதானம்  புதிதாகவும் அழகுறவும்  அமைக்கப்பட்டுள்ளது.

இப் பல்நோக்கு விளயாட்டு மைதானத்தை பெரியார் நூற்றண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் 09.04.2022 அன்று காலை 10.00 மணியளவில் திறந்து வைத்து மாணவர்களை உற்சாகத்துடன் விளையாடுமாறு ஆலோசனை கூறி வாழ்த்தினார்.

இந் நிகழ்வில் இக் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இக்கல்லூரியில் செயல்படும் விளையாட்டுத்துறை  வாயிலாக நடைபெறும்  தடகள விளையாட்டு மற்றும் குழு விளையாட்டுக்களில் கலந்து  கொள்ளும் மாணவ மாணவிகள் தங்களின் உடலையும்  உள்ளத்தையும் உறுதியாக வைத்துக் கொள்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.

No comments:

Post a Comment