ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்த முடியாது - ஜெர்மனி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 6, 2022

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்த முடியாது - ஜெர்மனி

பெர்லின், ஏப். 6- உக்ரைன் மீது ரஷ்யா 42ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப் போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்ய படை கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷ் யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.  

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தள வாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

இதற்கிடையில், உக்ரைன் மீதான போரை கண்டித்து ரஷ்யா வுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் பொருள தார தடைகளை விதித்து வரு கின்றன. அதேவேளை, அய்ரோப் பாவின் எரிவாயு, கச்சா எண்ணெய் தேவையை ரஷ்யாவே பூர்த்தி செய்து வருகிறது. 

அய்ரோப்பாவின் 40 சதவீத இயற்கை எரிவாயு மற்றும் 25 சதவீத கச்சா எண்ணெய் தேவையை ரஷ்யா பூர்த்தி செய்கிறது. இதனால், ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அய்ரோப்பாவுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. 

குறிப்பாக, அய்ரோப்பிய நாடான ஜெர்மெனியின் எரிவாயு, கச்சா எண்ணெய் தேவையை ரஷ்யாவே பூர்த்தி செய்து வருகிறது. ஜெர்மனியின் 55 சதவீத இயற்கை எரிவாயு தேவை, 34 சதவீத கச்சா எண்ணெய் தேவையை ரஷ்யா பூர்த்தி செய்கிறது. 

சமீபத்தில் அமெரிக்கா, அய் ரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்ததால் தங்களிட மிருந்து எரிவாயு, கச்சா எண்ணெய் வாங்கும் நட்பு வட்டத்தில் இல்லாத நாடுகள் தங்கள் நாட்டு பணமான ரூபெல்லில் தான் வாங்க வேண்டும் என ரஷ்யா அதிரடியாக அறிவித்தது. 

மேலும், ரூபெல்லில் வாங்க வில்லை என்றால் அய்ரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வரும் கச்சா எண்ணெய், எரிவாயுவை நிறுத்து வோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத் துள்ளது. இதனால், அய்ரோப்பிய நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன. மேலும், மாற்று ஏற்பாடுகளுக்கும் அய்ரோப்பிய நாடுகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், ரஷ்யாவிடமி ருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்குவதை தற்போதைக்கு நிறுத்த முடியாது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா விடமிருந்து எரிபொருள் வாங்கு வதை நிறுத்த சில காலம் தேவைப் படுகிறது என்று ஜெர்மனி நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment