சென்னை, ஏப்.25 சட்டப் பேரவையில் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக் கைமீதான விவாதத்தில் 22.4.2022 அன்று அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பதில் அளித்து கூறியதாவது:
கிராமப்புறங்களில் படிக் கும் சிறுபான்மையின மாணவிகள் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஊக்கத்தொகையாக 3-5 வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ.500-ஆம், 6-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.1,000-ஆம் வழங்கப்படும். இதற்காக ரூ.2.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் தகுதி வழங்குவதற்கான வழிமுறைகள் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் உருவாக்கப்பட்டு, இத்துறை மூலம் செயல் படுத்தப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் மட்டுமின்றி, மாநில அளவிலும் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா டிச.18-ஆம் தேதி கொண்டாடப்படும். உலமா ஓய்வூதிய தாரர் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமையால் வாடாமல் இருக்கும் வகையில், அக்குடும்பத்துக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment