* பள்ளி மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், பொது மக்கள் மத்தியில் பெரியார் நூல்களுக்குப் பெரும் வரவேற்பு! பேரீர்ப்பு!!
* காலை முதல் மாலை வரை நம் அரங்கத்தை சூழ்ந்து மொய்த்த புத்தம் புதியவர்களுடன் - பொழுதும் மாவட்டத் தலைவர்
உள்ளிட்ட தோழர்கள்!
* ஏப்ரல் 2இல் இருந்து தொடர்ந்து நடைபெற்ற இப்பெருவிழாவில் ஏப்ரல் 4ஆம் நாள் அமர்வு அய்ந்தில் "திறன் பேசியிலிருந்து
புத்தகத்திற்கு" என்ற தலைப்பில் திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி சிறப்புரையாற்றினார்.
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும், கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகமும் இணைந்து ஏப்ரல் 2 முதல் 9ஆம் தேதி வரை திருப்பத்தூர் இலக்கியத் திருவிழாவை மிகக் கோலாகலமாக நடத்தின.
60க்கும் மேற்பட்ட அரங்குகள், ஒரு இலட்சம் புத்த கங்கள், 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் பங்கேற்பு என நாளும் நாளும் விறுவிறுப்பின் அதிகரிப்பில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், பெரியார் புத்தக அரங்கம் (பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்), பள்ளிப் பிள்ளைகள், ஆசிரியர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டு பெரியார் நூல்கள் வாங்கப்பட்டு ஒவ் வொரு நாளும் விற்பனையில் சாதனைப் படைத்தது.
ஏப்ரல் இரண்டு அன்று காலை சிறுவர்கள், இளை ஞர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் மாவட்ட ஆட்சியர் அமர் குஷாவா, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, சோலையார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், மேனாள் நகர மன்ற தலைவர் அரசு, தூய நெஞ்சக் கல்லூரி முதல்வர் அருட்தந்தை மரிய ஆண்டனி ஆகியோர் நிகழ்வை துவக்கி வைத்து பின் பெரியார் புத்தக அரங்கை அலங்கரித்தனர். அனைவரையும் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் வரவேற்று புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
முதல் விற்பனையாக திராவிட கழக மாணவர் கழகத் தோழர் மத்தூர் மணிமொழி நூலினை பெற்றுக் கொண்டார். இரண்டாம் விற்பனையை திருப்பத்தூர் பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் குமரவேல், பகுத் தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா சரவணன் அவர்களிடம் பெற்றுக் கொண்டார். அடுத்து மாவட்டச் செயலாளர் விஜி.இளங்கோ வழங்க இணைச் செயலாளர் பெ.கலைவாணன் பெற்றுக் கொண்டார்.
காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைத் நிறுவனத் தலைவர் கோ.கணேஷ்மல் அவர்களும், மேனாள் தலைமை அஞ்சலக அதிகாரி பெருமாள்சாமி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.
அனைவருக்கும் பகுத்தறிவாளர் கழக நகர தலைவர் வ.புரட்சி பழங்கள், பழச்சாறு, இனிப்பு வழங்கி புத்தக அரங்கில் பணியாற்றும் தோழர்களை உற்சாகப்படுத் தினார் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவர் தவறாமல் வருகை தந்து சாக்லெட், கடலைமிட்டாய் வழங்கினார்.
முதல்நாள் நிகழ்வில் மாவட்ட ப.க. தலைவர் சி.தமிழ்ச்செல்வன், சோலையார்பேட்டை அசோகன், மாணவர் கழக நிலவன் ஆகியோர் உடன் இருந்து மாலை வரை உதவிகள் செய்தனர். பிற்பகல் நிகழ்வில் மாநில மகளிரணி பொருளாளர் அகிலா, மகளிர் அணி அமைப்பாளர் விஜயா, மகளிர் பாசறை அமைப்பாளர் சபரிதா, தி.மு.க. மேனாள் கவுன்சிலர் எம்.என்.அன்பழகன் ஆகியோரும் பங்கேற்று நூல்களைப் பெற்றுக்கொண் டனர். மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் சி.ஏ.சிற்றரசன் ஏற்பாடுகளில் துணை நின்றார்.
பெரியார் புத்தகங்களோடு அழகிய அய்யாவின் பைபர் சிலை விற்பனைக்கு வந்தது அனைவரின் கண்களைக் கவர்ந்தது. பெரியார் படம் இடம் பெற்ற
டி.சர்ட்கள் இளைஞர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. வாங்கி அங்கேயே அணிந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இரண்டு நாளில் அனுப்பப்பட்ட நூல்கள் முழுவதும் விற்பனையாகி தொடர்ந்து தலைமையிலிருந்து நூல்கள் கேட்டுப் பெறும்படியாக சிறப்பான அளவில் அனைவரும் வாங்கிச் சென்றது தோழர்களை உற்சாகப்படுத்தியது.
மிகப் பெரிய பிரச்சாரக் களம்:
இளைஞர்களும் பெண்களும் ஆர்வத்தோடு பெரியாரின் நூல்களை வாங்கிக் கொண்டு தம் முகவரி யையும், கைப்பேசி எண்ணையும் வழங்கி, நாங்கள் இயக்கத்தில் சேர வேண்டும் என்றும் அவ்வப்போது நடைபெறும் நிகழ்விற்கு எங்களையும் அழையுங்கள் என்றெல்லாம் சொல்லிச் சென்றது மிகப்பெரிய பிரச்சா ரப் பலனை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. பெரியாரை அறியாத புதியவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும், பெரியாரை அறிந்து இடையில் தொடர்பிலிருந்து சற்று விடுபட்டு இருந்தவர்களும் பெரியார் அரங்கைப் பார்த்ததும் அவர்களுக்கு மிகப் பெரிய புத்துணர்வாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.
ஏப்ரல் 3ஆம் நாள் மாநில பகுத்தறிவு கலை இலக் கிய அணிச் செயலாளர் மாரி.கருணாநிதி அவர்களோடு அவரது வாழ்விணையர் ஜீவிதா அவர்களும் பங் கேற் றனர். தருமபுரி மண்டல மகளிரணி செயலாளர் மு.இந்திராகாந்தி ரூ.3000 மதிப்பிலான நூல்களைப் பெற்றார். ஆசிரியர் தென்னன் அவர்களின் புதல்வன் குமணன், மருமகள் மருத்துவர் ஆகியோரும் வருகை தந்து நூல்களைப் பெற்றனர்.
குனிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் தமிழாசிரியர்கள் மாணவர்களோடு வருகைத் தந்து நூல்களை வாங்கிச் சென்றது மிகவும் மகிழத்தக்கது.
மாவட்ட இணைச் செயலாளர் பெ.கலைவாணன், அவரது வாழ்விணையர் மாவட்ட மகளிரணி தலைவர் கற்பகவள்ளி ஒவ்வொரு நாளும் வருகைத் தந்து காலை முதல் மாலை வரை முழு அளவில் உதவியாக இருந்தது பாராட்டத்தக்கது.
மாவட்ட தலைவரின் அர்ப்பணிப்பு:
மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் திருப்பத்தூர் இலக்கியத் திருவிழாவில் பெரியார் புத்தக அரங்கு கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என விரும்பி தலை மையிடம் ஒப்புதல் பெற்று ஏற்பாடு செய்தார். தொடக்க நாள் முதல் கழகத் தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள், ரோட்டரி மற்றும் அரிமா சங்கத்தினர் குறிப்பாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நூல் அரங்கிற்கு வரவழைத்து நூலை பெற வைத்தார்.
ழைவு வாயிலிலேயே பெரியார் புத்தக அரங்கு இருப்பதால் அவருக்கு அறிமுகமான பல நண்பர்களும் அவர் முகத்¬ப் பார்த்த உடனேயே கடந்துப் போக இயலாமல் நம் அரங்கிற்கு வருவதும், புத்தகங்களை பெற்றுச் செல்வதுமாக இருந்தது விற்பனையைக் கூட்டித் தந்தது.
ஏப்ரல் 4 அன்று பள்ளி மாணவர்கள் பலர் நூல் அரங்கிற்கு வருகை தந்து நூல்களைப் பெற்றனர். குறிப்பாக உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் “பெண் ஏன் அடிமையானாள்?" என்ற நூலை கேட்டுப் பெற்றனர். பொறியாளர் முகிலன் மற்றும் அவரது வாழ் விணையர் திரு.கணேஷ்மல் அவர்களிடம் நூல்களைப் பெற்றனர்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் நத்தம் அன்பு, சுந்தரம்பள்ளி, செவ்வாத்தூர், கந்திலி, கருப்பதூர் முதலான ஊராட்சி மன்றத் தலைவர்களை அழைத்து வந்து அதிகப்படியான நூல்களை பெறக் காரணமாயிருந்தார். திருப்பத்தூர் நகர் மன்ற உறுப்பினர் பரத் நூல்களைப் பெற்றார். மூத்த வழக்குரைஞர் ஜாக்கப் நூல்களைப் பெற்றார்.
ஏப்ரல் 5 அன்று இளைஞர்கள் பலர் அரங்கிற்கு வருகை தந்து டி-சர்ட் பெற்று அங்கேயே அணிந்து கொண்டு மாவட்டத் தலைவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, தங்கள் கைப்பேசி எண், முகவரி கொடுத்து இயக்கத்தில் இணைவதாக உறுதியளித்தனர். பேராசிரியர் அ.குமணன் அன்று முழுவதும் அரங்கில் உறுதுணையாக இருந்தார்.
ஏப்ரல் 6 மகளிர் அலைபோதும் நாளாக அமைந்தது. அரசு ஊழியராகப் பணியாற்றும் பெண்கள் அரங்கிற்கு வருகை தந்து "பெண் ஏன் அடிமையானாள்?", "பெரியார் 1000", "பெண்கள் தி.க.வில் சேரவேண்டும் - ஏன்?" உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் பெற்றுச் சென்ற னர். மாவட்ட அமைப்பாளர் கருப்புச்சட்டை மா.சி.பாலன் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து நூல்களைப் பெற்றுச் சென்றனர்.
பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர் ஆசிரியர் குமரவேல், தூய நெஞ்சக் கல்லூரி மாணவர்களோடு வருகைத் தந்து இளைஞர்களுக்கு அறிவுரை, இளை ஞர்களே உங்களுக்கு தெரியுமா? உள்ளிட்ட புத்தகங் களைப் பெற்றுச் சென்றனர்.
மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், அரூர் ஒன்றிய ப.க.தலைவர் ராஜேந்திரன், திமுக மாநில ஆதி திராவிடர் நலத்துறை, கலத்துறை மாநில துணைச் செயலாளர் அரங்கிற்கு வருகை தந்து நூல்களைப் பெற்று தோழர்களைப் பாராட்டிச் சென்றனர். ஆசிரியர் ஞானசேகரன் மூன்று நூல்களைப் பெற்றார். திருப்பத்தூர் பா.ஜ.க. பொறுப்பாளர் மரு.சற்குண பிரபு நூல்களைப் பெற்றார்.
ஏப்ரல் 7 அன்று நூல் அரங்கு திறந்தவுடன் நூல் விற்பனையை மாவட்ட செயலாளர் விஜி.இளங்கோ தொடங்கினார். பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர் சோ.திருப்பதி, அவரது வாழ்விணையர் நூல்களைப் பெற்றனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் தோழர் பழனிச்சாமி நூல்களைப் பெற்றும், பணியாற்றியும் சென்றார்.
மாநில மகளிரணி பொருளாளர் அகிலா நாள் முழுவதும் அரங்கில் இருந்து பணியாற்றினார். ஒசூர் வழக்குரைஞர் கா.க.வெற்றியும் வந்திருந்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர்புஷ்பகா, பாவலர் அறிவுமதி, திரைப்பட கலைஞர் ராமசாமி குங்குமம் குமரேசன், தொழிலதிபர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பெரியார் திரைப்பட இயக்குநர் ஞான.ராஜசேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பெரியார் புத்தக நிலையம் வருகை தந்து நூல்களைப் பெற்றனர். செய்தியாளர் முருகன், டாக்டர் கற்பகவல்லி, டாக்டர் வினோதினி, ரோட்டரி சங்க தலைவர் பாரதி மற்றும் உறுப்பினர்கள், டாக்டர் லீலா சுப்பிரமணி, சோ.சாமிசெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏப்ரல் 8 அன்று காலை பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர் கனிமொழி சோ.வ.புரட்சியிடம் நூல் களைப் பெற்றார். பள்ளி மாணவிகளுக்கு கற்பகவள்ளி நூல்களை வழங்கினார். தோழர் தா.பாண்டியன், பகுத் தறிவாளர் அக்னி அரவிந்த், வட்டாரக் கல்வி அலுவலர் கோமதி, ஆசிரியர் கண்ணகி ஆகியோர் நூல்களைப் பெற்றனர். மத்தூர் மகளிரணி பொறுப்பாளர் சி.முருகம் மாள் கழக நாட்காட்டி மற்றும் நூல்களைப் பெற்றுச் சென்றார். மத்தூர் ஆசிரியர் பழனி, கிருட்டிணகிரி மாவட்ட ப.க. செயலாளர் க.வெங்கடேசன் ஆகியோரும் நூல்களைப் பெற்றனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், நம் புத்தக அரங்கிற்கு வந்து பெரியார் பற்றிய நூல்களை அதிகம் வாங்கிச் சென்றார். துணை ஆட்சித் தலைவர் வில்சன் ராஜசேகர் வந்திருந்து இயக்க வெளியீடுகளை வாங்கிச் சென்றார்.
ஏப்ரல் 9 அன்று திருப்பத்தூர் நகர கழக செயலாளர் ஏ.டி.ஜி.சித்தார்த்தன் நூல்களைப் பெற்றும், நாள் முழுதும் பணியாற்றியும் சென்றார்.
அக்ரி அரவிந்த் தனது குடும்பத்தோடு வருகை தந்து அய்யா சிலை மற்றும் நூல்களைப் பெற்றுச் சென்றார். தருமபுரி மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி நூல்களைப் பெற்றார். கந்திலி ஒன்றிய தி.மு.க. செயலாளர் கு.ராஜமாணிக்கம், வாணியம் பாடி தோழர் அச்சுதன், தூய நெஞ்ச கல்லூரி மாணவர் வெட்வோணம் சிலம்பரன் மற்றும் மாணவர்கள் நூல் களைப் பெற்றுச் சென்றனர்.


No comments:
Post a Comment