ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிராக, இட ஒதுக்கீடு வழங்காமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் தசோஜூ ஸ்ராவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:

சக நடனக் கலைஞர் எந்த மதத்தையும் சாராதவர் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்று புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர்கள், கேரளக் கோவிலில் தங்களின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் இருந்து விலகியுள்ளனர்.

என்.டி.டி.வி.:

தமிழ்நாட்டில் திமுகவுடன் இருப்பதை போல் அகில இந்திய கட்சிகளுடன் கொள்கை ரீதியாக நட்பை காங்கிரஸ் வளர்க்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் டில்லியில் பேட்டி.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment