குறுகிய நேரத்தில் எல்லா தகவல்களையும் சொல்லிவிட முடியாது. ஆனாலும் இந்த தகவல்களையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்தே ஆகவேண்டும். அவர்களை அரசியல், சமூக விழிப்புணர்வு பெறவைத்தே ஆக வேண் டும் என்கின்ற தமிழர் தலைவரின் அளவற்ற அக்கறையின் காரணமாக, ஒவ்வொரு பரப்புரைக் கூட்டத்திலும் தமிழர் தலைவர் பேசுவதற்கு முன்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் பரப்புரைக்குத் தேவைப்படும் புத்தகங்கள் குறித்த அறிவிப்பினை வெளியிடுவார். அந்த அறிவிப்பில் ’நீட்’ தேர்வு எதிர்ப்பு, புதிய தேசிய கல்வி எதிர்ப்பு, மாநில உரிமைகள் மீட்பு ஏன்? எதற்கு? எவ்வாறு? ஆகிய புத்தகங்கள் முக்கியமான பங்கு வகிக்கும். 10 ரூபாய் மதிப்புள்ள 50 புத்தகங்கள் ஒன்றாகக் கட்டப்பட்டு (ரூபாய் 500 மதிப்புள்ளது) தமிழர் தலைவர் கைகளால் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர்; சமூக அரசியல் களத்தில் சக்தி வாய்ந்த தலைவர்; தமிழ்நாடு அரசுக்கு வழி காட்டக் கூடியவர்! ஆகவே அவரது கைகளால் பெற வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மாவட்டத்திலுள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல், கருஞ்சட்டையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் மேடையேறி 3.4.2022 இல் நாகர்கோயிலில் தொடங்கி 12.4.2022 செங்கற்பட்டு வரை புத்தகங்களை பெற்று வருகின்றனர். அந்த வகையில் இதுவரை ஆயிரக் கணக்கான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரத்தில் தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளரும், உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான சுந்தர் வெளியிட, தி.மு.க. மாணவரணிச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து காஞ்சிபுரம் மேயர், துணை மேயர், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மற்றும் தோழர்கள் பெற்றுக்கொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை ஆத்தூர் சுரேஷ், அருண் குமார், அர்ஜுன், சாந்தகுமார் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக எத்தனை பேர் வந்தாலும் கொஞ்சமும் சளைக் காமல், எழுந்து, எழுந்து புன்னகை பொழியும் முகத்துடன் தமிழர் தலைவர் புத்தகங்களைக் கொடுத்து மகிழ்ந்தார்.
தி.மு.க. உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பேசும் போது, “இந்த வயதில் மரியாதை செய்யும் போதும், புத்தகங்கள் கொடுக்கும் போதும் இத்தனை முறை எழுந்து, எழுந்து கொடுக்கிறாரே! எங்களால் முடியவில்லை. இத் தனைக்கும் அவரை விட 20 வயது இளையவன் நான். வியப்பாக இருக்கிறது! அவர் நூறாண்டு வாழ வேண்டும். அவர் வயதில் மாநில சுயாட்சியை நாம் பெறவேண்டும்Ó என்றார்.
No comments:
Post a Comment