மே மாதத்தில் மாவட்டம் முழுவதும் தெருமுனைக்கூட்டங்கள் இயக்க ஏடுகளுக்கு சந்தா திரட்டல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

மே மாதத்தில் மாவட்டம் முழுவதும் தெருமுனைக்கூட்டங்கள் இயக்க ஏடுகளுக்கு சந்தா திரட்டல்

தூத்துக்குடி மாவட்டக்  கலந்துரையாடலில் தீர்மானம்

தூத்துக்குடி, ஏப்.28 தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகத் தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் 24.4.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தூத்துக்குடி பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கில் மாவட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைச்செயலாளர் இரா.ஆழ்வார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மண்டலத் தலைவர் சு.காசி, மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி இருவரும் முன்னிலை ஏற்று உரையாற்றினார்கள்.

மாவட்டத் தலைவர் கூட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கவுரையாற்றினார்.நீட் எதிர்ப்புப் பெரும் பயணத்தில் கலந்து கொண்டு தூத்துக்குடி வருகை தந்த கழகத்தலைவர்,தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் தரப்பட்ட சிறப்பான வரவேற்புக்கும் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கும் சிறப்பாக ஒத்துழைப்புத் தந்த கழகத் தோழர்களைப் பாராட்டிப் பேசினார். 

அனைவருக்கும் பயனாடையினை சீ.மனோகரன் அணிவித்துச் சிறப்புச் செய்தார். இறுதியாக மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆ.கந்தசாமி நன்றி கூறிட நிகழ்ச்சி இரவு 7.30 மணியளவில் நிறைவு பெற்றது.

நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

   1. இரங்கல் தீர்மானம்:

2022 மார்ச் 14 ஆம் நாள் காலமான. மாவட்டத் துணைத் தலைவர் பொ.செல்வராஜ் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

2. கழக வளர்ச்சிக்காக மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் மே திங்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3.விடுதலை, உண்மை இதழ்களுக்குப் புதிய சந்தாக்களைச் சேர்த்துத் தருவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பொதுக்குழு உறுப்பினர் பெ.காலாடி, இளைஞரணி மாவட்டச் செயலாளர் த.செல்வராஜ், பொ.போஸ், சி.கோமதிநாயகம், செ.செல்லத்துரை, ஒன்றிய அமைப்பாளர் கோ.முருகன், கோபால்சாமி, செ.சண்முகம்  மற்றும் பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

No comments:

Post a Comment