சட்டமன்றத்தில் இன்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

சட்டமன்றத்தில் இன்று

பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும்  சட்ட மசோதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

சட்டப்பேரவையில் உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி சட்ட முன்வடிவு தாக்கல்

சென்னை,ஏப்.25-  மாநில பல்கலைக் கழகங்களில், மாநில அரசே துணை வேந்தரை நியமிக்க ஏதுவாக பல் கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் சட்ட முன்வடிவை இன்று (25.4.2022) தமிழ்நாடு சட்டப் பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல் கலைக்கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அழகப்பா பல் கலைக்கழகம், மனோன்மணியம் சுந் தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திறந்தநிலை பல் கலைக்கழகம், திருவள்ளுவர் பல் கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி.

குஜராத் பல்கலைக்கழக சட்டம் மற்றும் தெலங்கானா பல்கலைக்கழக சட்டத்தில், அம்மாநிலங்களின் பல் கலைக் கழகங்களுக்கு துணைவேந் தரை நியமிக்கும் அதிகாரம் அந்த மாநில அரசுகளுக்கு வழங்கப்பட் டுள்ளதாகவும், கருநாடகாவில் அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் துணை வேந்தர் நியமனம் நடைபெற்று வருவதாகவும், அதேபோல் தமிழ் நாட்டிலும் மாநில அரசே துணை வேந்தர்களை நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில் தமிழ்நாடு பல் கலைக்கழகங்கள் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள அரசு முடிவு செய்து அதற்கான சட்டமுன் வடிவைத் தாக்கல் செய்வதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.


No comments:

Post a Comment