அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரோபாட்டிக் கருவி மூலம் புற்றுநோய் அறுவை சிகிச்சை மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 12, 2022

அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரோபாட்டிக் கருவி மூலம் புற்றுநோய் அறுவை சிகிச்சை மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஏப்.12 - அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரோபாட்டிக் கருவி மூலம், புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அண்ணாசாலை யில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத் துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பதிவு செய்யும் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்று (11.4.2022) தொடங்கி வைத்தனர்.

 பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறிய தாவது: அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ்செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு எவ்வித வருமான உச்சவரம்பும் இன்றி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற 1,414 செய்தியாளர் குடும்பங்களை இணைக்கும் விதத்தில் இதுவரை 258 செய்தியாளர்கள் குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் 2 வாரங்களுக்கு நடைபெறுகிறது. அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர் குடும்பங்கள் இதில் இணைந்து கொள்ளலாம்.

அரசு பன்னோக்கு உயர் சிறப்புமருத்துவமனையில் ரூ.35 கோடியில் அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபாட்டிக்) அறுவை சிகிச்சைஅரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி வைத்தார். எய்ம்ஸ்மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் இந்த அதிநவீனஇயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை, இப்போது அரசு மருத்துவமனைகளிலும் அளிக்கப்படுகிறது.

கடந்த 7-ஆம் தேதி, திருப்பத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணன்(44) என்பவரின் சிறுநீர் பாதையில் புற்றுநோய் கண்டறியப்பட்டு, ரோபாட்டிக் கருவியினால் இங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் 2-ஆவது நாளே நலமுடன் வீடு திரும்பிஉள்ளார். தமிழ்நாட்டில் இதுவொருமருத்துவ சாதனையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment