சிங்கார சென்னை 2.0: தெருக்களின் பெயர்களில் இருந்து ஜாதியை நீக்கும் பணி தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 29, 2022

சிங்கார சென்னை 2.0: தெருக்களின் பெயர்களில் இருந்து ஜாதியை நீக்கும் பணி தொடக்கம்

சென்னை, மே 29 சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல் களும் தெருவின் பெயர் பலகைகளில் இடம் பெற்றுள்ளன

தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் பணியை சென்னை மாநகராட்சி துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் பெயர் பலகைகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி 8.43 கோடி ரூபாய் செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல் களும் இந்த பெயர் பலகைகளில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த பணியுடன் சேர்த்து தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் நடவடிக்கையையும் சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக 171 ஆவது வார்டில் உள்ள சாலையின் பெயரை சென்னை மாநகராட்சி மாற்றியமைத்துள்ளது.13ஆவது மண்டலம், 171 வார்டில் உள்ள ஒரு தெருவுக்கு அப்பாவு கிராமணி 2ஆவது தெரு என்று பெயர் இருந்தது.   இந்நிலையில் இந்த பெயரை மாற்றி சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி தற்போது இந்த தெருவின் பெயர் அப்பாவு (கி) தெரு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment