டில்லி, மே 10 நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. நேற்று (9.5.2022) காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
புதிதாக 2,288 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,07,689-ஆக உயர்ந்தது. புதிதாக 10 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,103-ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,044 பேர் குணமடைந் துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,63,949-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குண மடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 19,637 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,90,50,86,706 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 13,90,912 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment