கடந்த ஆட்சியில் மாநகராட்சியின் எந்தத் துறையும் சரியாக செயல்படவில்லை சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

கடந்த ஆட்சியில் மாநகராட்சியின் எந்தத் துறையும் சரியாக செயல்படவில்லை சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

சென்னை, மே 12 சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை பொது கணக்குக் குழு (2021- - 2023) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலை மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கணக்கு குழு உறுப் பினர்கள், மாநகராட்சி மேயர் துணை மேயர், ஆணையர் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்

ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, "சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. பெருங்குடி குப்பை கிடங்கில் பூமிக்கு அடியில் இருக்கும் மீத்தேன் வாயு மூலம் தீப்பற்றி எரிந்து மிகப்பெரிய மாசு ஏற்பட்டது. போர்க்கால அடிப்படையில் மாநக ராட்சி தீயை அணைத்துள்ளது. பெருங்குடி குப்பை கிடங்கு அருகில் உள்ள மக்கள் மாசடைந்த காற்றை சுவாசித்து வருகிறார்கள். 

அவர்களுக்கு துர்நாற்றம் வீசாமல் இருக்கவும், எடை மேடை உள்ள பகுதியை 400 மீட்டருக்கு அப்பால் தள்ளி போடவும், பல ஆண்டுகளாக செப்பனிடாத சாலையை சீரமைக்கவும் பரிந்துரை செய்துள்ளோம்.கடந்த ஆட்சியில் கழிவு மேலாண்மையில் கோயம் புத்தூர் மாவட்டத்தில் ஊழல் நடை பெற்றது தெரியும். சென்னையில் நடைபெறும் ஊழல்களின் தரவு களும் உள்ளது. அம்மா உணவகத் திற்கு 1.33 கோடி ரூபாய்க்கு இயந்திரம் வாங்கியதில் தவறு இருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

கோதுமைக்கு பத்து ரூபாய் அதிகமாக வாங்குவதாக சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். 

கடந்த ஆண்டுகளில் நடந்த தவறை சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த ஆட்சியில் 442 கோடி ரூபாய் மதிப்பிலான 16 திறந்தவெளி இடங்கள் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிர மிப்பாளர்கள் மீதும், இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மாநகராட்சிக்கு சொந்தமான ஓஎஸ்ஆர் இடங்களில், கார் நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைத்து விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்வோம். கடந்த ஆட்சி யில் மாநகராட்சி யில் எந்த துறையும் சரியாக செயல்படவில்லை என ஒன்றிய தணிக்கைக் குழு அறிக்கை அளித்துள்ளது" என தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்குக் குழு ஆய்வு 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடை பெற்றது என்பது குறிப்பிடத்

தக்கது.


No comments:

Post a Comment