டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* தேசத் துரோக சட்டத்தின் கீழ் புதிய வழக்குகளை பதிவு செய்யக் கூடாது, என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ஆளுநருக்காக ஒன்றிய அரசு வாதிடுவது ஏன்?.. ஆளுநரின் மன்னிப்புகள் அரசமைப்புக்கு எதிரானதா? பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
தி டெலிகிராப்:
* வாரணாசியின் க்யான்வாபி மசூதி பற்றி நிலவி வரும் கதையினை இணைய விவாதத்தின் போது கூறிய லக்னோ பல்கலைக்கழக பேராசிரியருக்கு எதிராக ஏபிவிபி உறுப்பினர்களின் மிரட்டலுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட கல்வி
யாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment