நாட்டின் பாதுகாப்பு துறையின் தகவல்களே உளவு மென்பொருள்மூலம் திருடு போகிறதாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

நாட்டின் பாதுகாப்பு துறையின் தகவல்களே உளவு மென்பொருள்மூலம் திருடு போகிறதாம்!

தேசிய புலனாய்வு முகமை விசாரணை

புதுடில்லி,மே 9- பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் மின்னணு கருவிகளில் இருந்து ரகசிய தகவலை திருடுவதற்காக ஒரு முகநூல் பக்கத்தை பாகிஸ்தானின் உளவுத் துறை (அய்எஸ்அய்) உரு வாக்கியுள்ளது குறித்து தேசிய புல னாய்வு முகமை (என்அய்ஏ) விசாரணை நடத்துகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு தொடர் பான ரகசிய தகவல்களை திருடுவதற் காக, பாகிஸ்தானின் உளவு அமைப்பான அய்எஸ்அய், முகநூலில் ஷாந்தி படேல் என்ற பெயரில் ஒரு பக்கத்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அய்எஸ்அய் உளவாளி கள், பாதுகாப்புத் துறை மற்றும் அதன் அதிகாரிகளுடன் சமூக வலைதளங்கள் மூலம் நட்பை ஏற்படுத்திக் கொள் வார்கள்.

பின்னர் அவர்கள் பயன்படுத்தும் கணினிகள், செல்பேசிகள், மடிகணினி மற்றும் இதர மின்னணு கருவிகளில், அவர்களுக்கு தெரியாமல் ஒரு மென் பொருளை (மால்வேர்) புகுத்தி ரகசிய தகவலை திருடுவார்கள்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திர காவல் துறை ரகசியங்கள் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, அய்எஸ்அய் அமைப் பின் இந்த சதித் திட்டம் வெளியானது. 

முகநூல், இன்ஸ்டாகிராம், கேமிங் செயலி உள்பட மொத்தம் 89 சமூக வலைதள கணக்குகளை மின்னணு கருவிகளிலிருந்து நீக்குமாறு வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி பாதுகாப்புத் துறை உத்தர விட்டது. ஆந்திர காவல் துறை விவ காரத்தை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்கள் திருட்டு விவகாரத்தில் தேசிய அளவிலோ பன்னாட்டளவிலோ உள்ள தொடர்புகள் குறித்து என்அய்ஏ விசாரணை நடத்தி வருகிறது. அலுவல் ரகசிய சட்டம்(ஓஎஸ்ஏ), சட்டவிரோத செயல்தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல்ஆகியவற்றின்கீழ் என்அய்ஏ விசாரணை நடத்துகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment