சென்னை, ஜூன் 28 அரசு பள்ளியில் படித்த மாணவியருக்கான ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகளை தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதி கரிக்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல் படுத்தப்படும் மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000/- வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப் படும்.
இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுத லாக உதவி பெறலாம்.
தகுதிகள் என்ன?
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ் நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.
தனியார்ப் பள்ளியில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற பின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிரா விடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவி களும் இத்திட்டம் பொருந்தும்.
மாணவிகள் 8 (அ) 10 (அ) 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங் களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
சான்றிதழ் , பட்டயம் , இளங் கலைப் பட்டம் , தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்றவைகளில் சேருபவர் களுக்கு இது பொருந்தும்
தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத் திட்டம் பொருந்தாது.
2022- - 2023ஆம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற் படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க லாம்.
இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டி லிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற் கல்வியைப் பொறுத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவி களுக்கும், மருத்துவக் கல்வியைப் பொறுத்தமட்டில் நான்காம் ஆண்டி லிருந்து அய்ந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத் திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
2021- - 2022ஆம் ஆண்டில், இறுதி யாண்டு பயிலும் மாணவிகள் இத் திட்டத்தின் கீழ் பயனடைய இய லாது.
ஏனெனில் ஒரு சில மாதங் களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை நிறைவு செய்துவிடுவார்கள்.
இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். முது நிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணைய தளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண்.14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள் ளலாம்.
No comments:
Post a Comment