அதிகரிக்கும் கரோனா : தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

அதிகரிக்கும் கரோனா : தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

புதுடில்லி, ஜூன் 4 கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஒன்றிய நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களின் நல்வாழ்வுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்ட தொடர் நட வடிக்கைகளால் கடந்த 3 மாதங்களாக நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் ஒரு வாரமாக தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக பாதிப்பு கணிசமாக அதிகரித் துள்ளது வருத்தமளிக்கிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன் இப்போதைய பரவலால் வீணாகிவிடக் கூடாது. நோய்த் தடுப்பு விதிகளை முழுமையாக கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனைகளை தீவிரப்படுத்துதல் உட்பட பல்வேறு நிலைகளில் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

 கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment