பெரியார் கேட்கும் கேள்வி! (704) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (704)

தன்னை வேறு ஒரு மனிதன் வணங்க வேண்டுமென்று ஒரு மனிதன் நினைத்தானேயானால், அவனை நாம் எவ்வளவு அயோக்கியன் என்றும், ஆணவக்காரன் என்றும், இழி குணம் படைத்தவனென்றும், ஈனன் என்றும் சொல்லுகின்றோமோ இல்லையா? அப்படியிருக்க, ஒரு கடவுள் என்று சொல்லப்பட்டவர் தன்னை வணங்குவதற் கென்று பல கோடி மக்களைப் படைத்து அவர்களைப் பலவிதமான கஷ்டங்களும், குறைகளும் அனுபவிக்க விட்டு வேடிக்கைப் பார்த்தால், அப்படிப்பட்ட கடவுள் நல்லவர், பெருந்தன்மையுள்ளவர், தயாபரர், கருணா மூர்த்தி, விருப்பு-வெறுப்பு, தற்பெருமை இல்லாதவர் என்றெல்லாம் அறிவுள்ள மனிதனால் சொல்ல முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment